பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ஔவையார் தனிப்பாடல்கள்



வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

"இருமுறை எடுத்துச் சொல்லியும் வெண்பாவின் பொருளை அறியாமற் போனவனை, வெள்ளிய ஓலையில் கண்ணால் பார்த்துச் செய்தியை அறிந்து கொள்ளச் செய்யும் படியாகத் தன் கையால் எழுத அறிந்திராதவனை, பாவஞ் செய்த ஒரு பெண் தானும் பெற்றுவிட்டாளே? பிறர் கண்டு நகைக்கும்படி அப்படி அவனைப் பெற்றுவிட்டாளே! பேயே! அவளைப் போய்த் தாக்குக! தாக்குக! தாக்குக!” என்பது பொருள்.

இதனைக் கேட்ட பேய், தான் தொடர்ந்து செய்துவரும் முட்டாள்தனத்தை உணர்ந்து கொண்டது. எனினும், பேய்க்குணம் போகுமா? மீளவும் அது தன் குணத்தைக் காட்டத் தொடங்கியது.

51. ஈயாதானைத் தாக்கு!

பேய், 'ஒளவையாரின் பாடலால் தான் ஏமாற்றம் அடைந்ததற்கான உண்மையைத் தெரிந்து கொண்டதும், அது தன் வினைக்கு நொந்து, கோவென்று அழத் தொடங்கியது.

"பேயே! நல்லவர்களைத் தாக்குவது தவறு. ஈச்சங்கனி உண்பதற்கு ஏற்றதுதான். ஆனால், நெட்டிப்புல் சூழ்ந்த புதரிடையே இருந்தால், அதனால் எவருக்காவது பயனுண்டா? சுற்றும் கருங்குளவிகள் சூழ்ந்து கொண்டிருந்தால் அதனை யாரேனும் நெருங்க முடியுமா?

"அதுபோலப் பணத்தைச் சேர்த்தும் பசித்து வந்த விருந்தினருக்கு உதவாது சிலர் இவ்வுலகில் வாழுகின்றனர். அந்தக் கொடியவர்களைச் சென்று தாக்குவாயாக! அவர்களுடைய தாயத்தாராவது அவர்களுக்குப்பின் செல்வம் உடையவர்களாகிச் சிறப்பு அடைவார்கள்” என்று கூறினார்.

கருங்குளவி சூரைத்துற் றீச்சங் கனிபோல்
வருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை - அரும்பகலே
இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வரே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

"பேயே! கருங்குளவிகள் சூழ்ந்திருக்க, நெட்டிப்புல் புதரினிடையே விளங்கும் ஈச்சங்கனியைப்போல, வறுமைப் பட்டவர்களுக்கு யாதும் கொடாது, பயனற்ற செல்வத்தை சேமித்து வைத்தவனின் வாழ்க்கையில், அவன் இச்சித்திருந்த