பக்கம்:கங்கா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శిక్ష கங்கr அலைந்தன. எதிரில் ஏரிக்கரை, இருமருங்கிலும் காற்றில் அலைந்து பிசாசு ஆடும் பனைகள், அப்பால் வயல்களும் கட்டான் கட்டானாய் வயற்பரப்புக்களும்; அந்தண்டை ஊருக்கு மதில்போல் நிற்கும் சவுக்குத் தோப்பு: அதன் மேல் அடிப்பாரம் போட்டுக் கொண்டு கொட்டத் தயா ராகும் இன்னொரு மேகத்திரள். இத்தனையும் வட்டமிட்டு மீள்கையில்தான் பார்வை எதிரேயே, கிட்டவே நின்ற பாழ் மண்டபம் மேல் விழுந்தது. இடுப்பின் கீழ்க் கல்லாய்க் கனத்த கால் களை என்னோடு எதிர் வெள்ளத்தில் இழுத்துக் கொண்டு மண்டபத்தை அடைந்தேன். உடலோடு ஒட்டிப்போன சட்டையை உரித்துப் பிழிந்தேன். சாரல் சாட்டை நுனி மாதிரி கொட்டிற்று. பழுக்கக் காய்ச்சிய ஊசிபோல் குளிர் சுறிலென உடலை ஊடுருவிற்று. "நல்ல மழை” உருத் தெரியாது. குரல்மாத்திரம் மண்டபத்தில் தேங்கிய இருளின் உள்ளினின்று வெளிப்பட்டதும் தூக்கி வாரிப்போட்டது. கண்கள் இருளைத் துருவ முயன்றன. உதவியாய் குரலுக்குடையோனும் இருளினின்று வெளிப் பட்டான். அவனும் இடுப்புவரை வெறும் உடம்பு. "சமயமும் இதுதான் சரி, இத்தனை காய்ச்சலுக்கப் புறம் இப்படிப் பூமி குளிர்ந்து, ஆடி விதைப்புக்கு, மாசியறுப்பு சுமாராய் இருக்கும். போன வருஷமே பயிர் பதராய்ப் போச்சு. இப்போது அரை வயிற்றுக்காவது ஆகுமா ?” அவன் தொடுத்த பேச்சு என் செவி பட்டதே யன்றிக் கவனம், அவன் வலக் கரத்தில் பாய்ந்து அங் கேயே விறைத்தது. அவன் கை, தோள் பூட்டினின்று முழங்கைவரை இரு சுண்டு விரல் பருமனுக்குச் சூம்பிப் போயிருந்தது. அவ்விடத்துத் தோல் சுட்ட பழம்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/100&oldid=764272" இலிருந்து மீள்விக்கப்பட்டது