பக்கம்:கங்கா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

87


சுருங்கி அருவருப்பையும் சிறு பயத்தையுங்கூடத் தந்தது. கொஞ்சம் சுரண்டினால், அல்ல இசைகேடாய் எங்கே யாவதுபட்டுவிட்டாலும் எலும்பின் முகடு வெளிப்பட்டு விடுமோ என்னவோ ? . அவன் புரிந்து கொண்டு விட்டான். "சட்டையைப் பிழிந்து உலர்த்தியிருக்கிறேன்" நான் வெட்கி வார்த்தைக்குத் தட்டுத் தடுமாறி னேன். அவன் புன்னகையுடன் கையமர்த்தினான். "ஒரு விஷயம்: என்னைப் போன்றவர்கள் ஒரு தினுசில் உங்களைப் போன்றவர்களைவிட உயர்ந்தவர்கள்தான். நாங்கள் போனவிடமெல்லாம், கவனம் கவர்ந்து விடுவோம். எப்போதுமே அழகைவிட அங்கஹரீனத் துக்குத்தான் ஆச்ரயிப்பு." பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். "ஒரு தினுசில் நாங்கள் துறவிகள் கூட, நாங்கள் ஒட்ட விரும்பினாலும் எவரும் எங்களோடு ஒட்டப் பயப் படுவார்கள். சிதைவு கண்ட அருவருப்பு அப்புறம் என்ன தான் இழைந்தாலும், இடையில் சுவர் விழுந்துவிடுகிறது. இந்தச் சுவர் எங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக் கிறீர்களா ? பழகப்பழக அருவருப்பு மறைந்துவிடுகிறது என்றே சாதிப்பீர்கள். அதையும் உண்மையென்றே வைத்துக் கொள்வோம். சரி. அருவருப்புத் தாண்டி அல்ல, மாறி உங்களுக்குத் தோன்றுவதென்ன? இரக்கம், அனுதாபம் படியேறிக் கைநீட்டும் பிச்சைக்காரனுக்கும், நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வாலைக் குழைக்கும் நாய்க்கும் காட்டும் மனக்கசிவு வேண்டா மையா, உங்கள் இரக்கம் !” "பின் என்ன வேண்டும் உங்களுக்கு ?" அவன் விரலைச் சொடுக்கினான். "அன்பு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/101&oldid=1283314" இலிருந்து மீள்விக்கப்பட்டது