பக்கம்:கங்கா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○f。 卒。リr。 9i "சொந்தத்திலேயே ஒரு பெண் இருந்தாள். ஊரும் பேரும் இப்போ எதற்கு ? நாமே நமக்குப் புரியவில்லை. பேருக்கும் ஊருக்கும் என்ன முக்கியம் வந்தது ? பிரமாத அழகு என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவள் அவய ங்கள் முழுமையாயிருந்தன. எனக்கு அதைவிட உயர்ந்த லக்ஷணம் கிடையாது. ஏழைக் குடும்பந்தான். ஒருவேளை நானே மணம் புரிந்திருக்கலாம். ஆயினும் என் கை...?” "நான் என் கைக்கு அஞ்சி, அவள் வீட்டாரைக் கேட்க வில்லை. என் பணத்திற்கு அஞ்சி அவர்கள் எனக்கு அவளைப் பேச முன்வரவில்லை. அல்ல அங்கேயும் என் கைதான் பேசிற்றோ என்னவோ? பிள்ளைப் பருவத்தில் சேர்ந்து விளையாடுகையில் அவள் என் கையை எத்த னையோ கேலி பண்ணியிருக்கிறாள். “எப்படியிருந்தால் என்ன ? அவளுக்குக் கல்யாண மாகாமல் போகிறதா ? அந்தப் பையனைக்கூட எனக்குச் சுமாராய்த் தெரியும். நல்ல பையன். ஆனால் அவர்கள் மாதிரியே அவனும் பரம ஏழை. ஏழைதான் ஏழையாகிக் கொண்டு வருகிறான். அவனுக்கும் உற்றார் உறவினர் இல்லை. மணமானதும் அவளை கூடவே தான் பிழைக்கும் இடத்திற்கு அழைத்துப் போய்விட்டான். எப்போதாவது ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவனிடமிருந்து ஒரு வரி வரும். "ஒரொரு சமயம் மனதில் கவியும் இருளை எப்படி அளவிடுவது ? மனோவிகாரத்தின் மூட்டத்தில் கண்ணால் காணுவதெல்லாம் கூடச் சுய ஒளி மங்கியழுகின்றன. என் தனிமையில் எத்தனை தடவை உலகம் அம்மாதிரி சோபை இழந்திருக்கிறது தெரியுமா ?” "காட்டிலும் சிறையிலும் உணரும் தனிமை சகிக்கக் கூடியது; தன் இஷ்டமாவோ, பிறராலேயோ பலவந்த மாய் ஏற்படுத்திக் கொள்ளும் அந்தத் தனிமைகளிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/105&oldid=764277" இலிருந்து மீள்விக்கப்பட்டது