பக்கம்:கங்கா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

கங்கா


விடுவித்துக் கொள்ளவோ விடுதலை பெறவோ പേരുണ്ണ് யுண்டு. அல்ல வேளைவரும் எனும் நம்பிக்கையேனும் உண்டு. ஆயினும் எத்தனை பேர் என்னைச் சுற்றி யிருந்தும் நான் என்னுள் உணர்ந்த தன்மை ಆಹಹ முடியவில்லை. இது உள்ளத்தின் தனிமையா ? உடலின் தனிமையா ? "ஓரிரவு சரியான தூக்கம் இல்லை. நடுநிசி தாண்டி சற்றுக் கண்ணயர்ந்தேன். ஆயினும் எனக்குத் துரங்கின. மாதிரியே உணர்வு இல்லை. விழித்த கண்களுடனேயே நேரே ஒரு கனவுள் புகுந்துவிட்டேன்.” "நீலக் கண்ணாடியிட்டாற் போல் க ண் குளி ர என்னைச் சுற்றி நீல இரவு பார்வையை ஏமாற்றிய சரடுகளிலிருந்து நக்ஷத்ரங்கள் விளக்குகள் போல் தொங்கின. நான் நடு ஜலத்தில் ஒரு ஒடத்தில் துடுப்புக் களை நானே தள்ளிக்கொண்டு போய்க் கொண்டிருந் தேன். எங்கென்று அறியேன். இரு பக்கங்களிலும் அலை மடிந்த நீலக்கரை மேட்டிலிருந்து தென்னை மட்டைகள் ஜலத்தின்மேல் தாழ்ந்து தோளிலும் ஜலத்திலும் இடித்தன. என்ன ஆச்சரியம் ! என் தோளில் ஊனம் இல்லை. துடுப்புக்களை முன்னும் பின்னுமாய் குனிந்தும் நிமிர்ந்தும், தள்ளிக் கொண்டு நான் தண்ணிரைக் கிழித்துக் கொண்டே முன்னேறுகையில் நரம்பு முடிச் சுக்கள் புஜங்களில் பந்து பந்தாய் எழும்பி வடிவது கண்டேன். "இருந்தாற்போலிருந்து ஒடம் கரை தட்டிற்று. அவள்-என் பால்ய சிநேகிதி-கரைமீது நின்றிருந்தாள். ஏன் தன்னந்தனியாய் அந்நேரத்தில் அங்கே நின்றாள் என்று நான் கேட்கவில்லை; கேட்கத் தோன்றவும் இல்லை. நாங்கள் சந்திக்க முன்னாலேயே ஏற்பாடு பண்ணிக் கொண்டோம் போல் அவள் அங்கே காத் திருந்தாள். நான் கையை நீட்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/106&oldid=1283317" இலிருந்து மீள்விக்கப்பட்டது