பக்கம்:கங்கா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

93


"என் கையைப் பிடித்துக் கொண்டு அவள் ஒடத்தில் தாவி ஏறினாள். ஒடம் தானே நகர்ந்தது. அவள் நீலப் புடவை உடுத்தியிருந்தாள். அடித்தட்டில் மல்லாந்து படுத்தபடி என்மேல் வைத்த விழி மாறாது என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒடத்தின் இரு பக்கத்திலும் ஜலம் கிளுகிளுத்தது. நான் அவளை அணைத்தேன். "நான் அப்பொழுது நானாய் இல்லை; ஆனால் என் நினைவு என்னைவிட்டு ஓடிவிடவில்லை. ஆனால் நான் அப்போது எப்படி இருந்தேன் என்று உன்னிடம் சொல்ல முயல்கையில் பாஷை தடைப்படுகிறது; தளர்வு அடை கிறது. இருந்தாலும் "நான் ஒரு நீலச் சுடரானேன், கர்ப்பூரம் அசை வற்று எரிவதுபோல. அதாவது மனம் ஒன்றில்-அது எதுவாயினும் சரி-ஒன்றில் ஒன்றுபட்டு, அவ்வொன் நன்றி மற்றெல்லாம் மறந்து, அல்லது மற்றவை வினின்று விடுபெற்று அவ்வொன்றின் நினைவும் அடங்கி, நினைவு என்று ஒன்று இருந்தால் ஒன்று என்று நினைவு குறித்த அது, அந்நினைவும் இன்றியதால், அதுவும் அழிந்துவிடின், பிறகு அது என்று எது? என்னுள் உருவற்று இருந்த அத்தனையும் உருவானதோ டல்லாது அவ்வுருக்களின் ஒன்றாயும் ஒருமையாவும் நான் அதுவாகி, அதுவும் தாண்டிய எதுவும் ஆனதனால் என்னுள் குறையாய் இருந்த அத்தனையின் நிவர்த்தியுமானேன்; என்னின் நிவர்த்தியு மானேன். - - "திடீரென ஒடம் எங்கோ ஜலத்தடியில் பாறைமீது மோதியதுபோல் குலுங்கி, அடித்தட்டு திறந்து கொண்டது. அவள் அப்படியே மூழ்கிப் போனாள். என் உடல் குலுங்கியது. நான் விழித்துக் கொண்டேன். ஜன்னலுக்கு வெளியே கருவானில் வெண் மேகங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/107&oldid=1283318" இலிருந்து மீள்விக்கப்பட்டது