பக்கம்:கங்கா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

கங்கா


விரைந்து சென்று கொண்டிருந்தன. என் மனத்தி லிருந்து பிதுங்கிய தோற்றம் மனதிலேயே மறைந்து போயிற்று. ஆயினும் அழிந்து போகவில்லை. அதன் ஒவ்வொரு அங்கமும், என் அங்கத்தின் கதை அல்லவா : ஆழமாய்ப் பதிந்து போயிற்று. இல்லாவிடில் இவ்வளவு பளிச்சாய் இன்னமும் சொல்ல வருமா? "இரண்டு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் மாலை, வெளியிலிருந்து அறைக்குத் திரும்பிக் கதவைத் திறந் ததும் உள்ளே காலடியில் ஒரு கடிதம் இடறிற்று. தப்ால்காரன் கதவிடுக்கின் வழியே உள்ளே தள்ளியிருந் தான். பிரித்துப் படித்தேன். என் சிநேகிதன் கால வித்தியாசத்தையும், கிரகக் கோளாறுகளையும், அதிருஷ் டத்தையும், வயிற்றுப் பிழைப்பின் கஷ்டங்களையும் பற்றி பக்கம் பக்கமாய் எழுதிவிட்டு. கடைசியில் ஒரு வரி, அவள் இரண்டு மாதங்களாய் ஸ்நானம் பண்ன்ை வில்லை என்று எழுதி இருந்தான். எனக்குக் கண்ட அதிர்ச்சியில் நான் அப்படியே உட்கார்ந்து விட்டேன். நான் எக்காரணத்தினால் அப்படி நினைத்தேன் என்று கேளாதேயுங்கள், அல்லது நான் நினைத்தது நடக்கக் கூடியதா என்றும் கேளாதே யுங்கள், அல்லது நான் நினைத்தது பாபமா, புண்ணி யமா என்று கேளாதேயுங்கள். பாபம், புண்ணியம் இரண்டின் வித்தியாசம் திண்ணமாய் எனக்கு இன்னமும் தெரியாது. அவள் வயிற்றில் கண்டிருக்கும் பொறி என்னுடையது என்ற திண்ணம், என் மனத்தில் மின்னலைப் போன்று பளிச்சென்று பாய்ந்த வேகத் திலேயே விழுந்துவிட்டது. அந்த நிமிஷத்திலிருந்து என்னை உறுத்திக் கொண்டிருந்த தனிமையின் ஏக்கமும் தணிய ஆரம்பித்தது. நானும் எல்லோரையும் போலத் தான். இல்லை, ஒரு படி உயர்ந்தவன். “அவனுக்குப் பணம் அனுப்பினேன். திருப்பிக் கொடுப்பதைப் பற்றி கவலைப்படவேண்டாம், ஒருவருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/108&oldid=1283319" இலிருந்து மீள்விக்கப்பட்டது