பக்கம்:கங்கா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

95

. கொருவர் உதவத்தான் பணம் இருக்கிறது என்றும், இன்னும் நான் நம்பியதும், நம்பாததுமான பொது வேதாந்தங்களும் எழுதிவிட்டு, இனித் தாயாகப் போகிறவளின் உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளும்படியும் எழுதினேன். "அப்புறம் நான் நாட்களை எண்ண ஆரம்பித்தேன். என்றேனும் என் குழந்தையை நான் என் மார்மேல் சாத்திக்கொண்டு அதன் கண்ணத்தை நிமிண்டி விளை யாடும் நாள் வரும். அது தன் கனவில் அது மலர் காணுகையில் அதன் வாய் மலர்வதைக் கண்டு களிக் கவும் முடியும். என் ஒரு வேலை அதைப் பெற்றவர் களிடத்துக்கே நான் போனாலும் போய்விடுவேன். இப் பொழுது நான் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டேயிருக்க வேண்டுமென்று எனக்கு என்ன கட்டாயம் ? பெண்ணாய்த்தான் பிறக்கும். அதைப்பற்றி நான் ஏன் அவ்வளவு நிச்சயமாயிருந்தேன் ? சில சமயங்கள் பாருங்கள், நல்ல அறிவோடு இருக்கை யிலேயே கட்டும் இம் மனக் கோட்டைக்கு ஜார ஜன்னி யின் வாய்ப்பிதற்றல் எவ்வளவோ தேவலை, ஏதேனும் ஒரு சாக்கை வைத்துக் கொண்டு மாதம் தவறாது அவனுக்குப் பணம் அனுப்பி வந்தேன். பிள்ளைப்பேறுக்கு அவள் பிறந்தகம் வந்திருந்தாள். கூட அவள் கணவன் வர முடியவில்லை. அந்தப் பக்கம் வந்த யாரோடேயோ துணைகூட்டி அனுப்பியிருந்தான்: நான் அவளைப் பார்க்கப் போகவில்லை. ஆனால் ஒரு முறை அகஸ்மாத்தாய்க் குளக்கரையில் சந்திக்க நேர்ந் தது. ஸ்நானம் பண்ணிவிட்டு ஈரப்புடவையுடன் படித் துறை ஏறிக் கொண்டிருந்தாள். நான் இறங்கிக் கொண் டிருந்தேன். மேனி மினுமினுப்பாய்த்தான் இருந்தாள். அத்தனை நாள் கழித்து முதன் முதலாய்க் கண்ட உணர்ச்சிதானோ அல்ல அவளுடைய வயிற்று நிலையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/109&oldid=1283320" இலிருந்து மீள்விக்கப்பட்டது