பக்கம்:கங்கா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீக்குளி விகிணத்தின் வெடிப்பைக் காட்டிலும் அதன் அவசரம் தான் அவனை எழுப்பிற்று. யார் விட்டு எங்கிருந்து கிளம்பியதோ? ஆனால் அவனை மாத்திரம் அறைகூவி அழைத்துத் தட்டியெழுப்பிற்று. "தோ பார் ! கிளம்பப் போகிறேன்-கிளம்பிக்கொண் டிருக்கிறேன்-கிளம்பிவிட்டேன் ” கண் விழித்துக் கொண்டிருக்கையிலேயே அதன் பொறிவால் ஆகாயத்தில் வரைந்த வளை கோட்டைத் தான் கண்டான். ஜன்னலுக்கு கெளரி கட்டியிருந்த வெள்ளைத் திரையினூடே அத் தீக்கோடு மங்கலாய்த் தான் தெரிந்தாலும் புலன்களுக்கும் தாண்டிய உள்ளறிவில் கத்திபோல் சரேலென உள் சொருகிற்று. அதுவே சுரீலென வலித்தது. கட்டிலுக்கு வெளியே தொங்கிய கை வேதனை யில் முஷ்டித்து விரிந்தது. வெடிப்பிலிருந்து பச்சை, நீலம், ஊதா, சிவப்புப் பொறிகள் சரம் சரமாய்க் குடை கவிழ்ந்து இறங்கின. ஒரு கணம், ஜன்னல் சட்டமிட்ட வானவெளி ஜோதி மயமாகி, மறுகணம் பொறிகள் கருகின. மனக்குகையில் கலைந்த இருள் படலங்கள் வானளவு எழும்பி, வான் திரும்பவும் இருண்ட இருள் அவனையும் கவ்வித் தன்னுள் இழுத்தது. மாட்டேன்! மாட்டேன் உள்ளுணர்வு அலறிற்று ஆயினும் மனக் குகையில் கலைந்த இருள் படலங்களின் பலாத்கார ஆலிங்கனத்தில் அவன் புதைய ஆரம்பித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/112&oldid=764285" இலிருந்து மீள்விக்கப்பட்டது