பக்கம்:கங்கா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

கங்கா


விட்டான் வேலைத் தொந்தரவால் முதல்நாள் மாலை தான் வர முடிந்தது. மச்சான்மார்களுக்கு அத்திம்பேர் மேல் உயிர் கடைக் குட்டி மாது வாசலுக்கும் உள்ளுக்குமாய் அலைந்தான். அத்திம்பேரின் வரவையறிவிப்பதில் எல்லோருக்கும் ‘பஸ்டா'யிருக்கணும், அதில் ஒரு பெருமை. ஆனால் வாசலில் வண்டி வந்து நின்றபோது அவன் சமையல்கட்டில் இருக்கும் சமயமாய்த்தான் நேர்ந்தது. அம்மா தலை திரும்பிய நேரம் பார்த்து மைசூர்ப்பாகுக் கட்டியை லவட்டிக்கொண்டு விழுந்தடித்து வருவதற்குள் கெளரியும் அவள் புருஷனும் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார்கள். "அம்மாவ் அத்திம்பேர் வந்துட்டார் : அக்கா வந்துட்டா !” முன்றானையில் கையைத் துடைத்துக் கொண்டு அவன் அம்மா வந்தாள். "வாங்கோ வாம்மா, கெளரி !” வாய் வரவேற்கையிலேயே கண் மகளை வெள்ளோட் உம் விட்டது. வெளித் தோற்றத்திலிருந்தே உள் அந்தரங் கத்தை அறியப் பார்க்கும் ஸ்திரி சாமர்த்யம் செளக் கியமா என்று கேட்டால் நான் செளக்கியம் என்றுதான் கிடைக்கும் பதிலடியில் பதுங்கும் அசெளக்யம், அவலம், நிஜம் எது என்று தனக்கே கண்டுகொள்ளப் பார்க்கும் மிருக சூசகம். "என்னம்மா செளக்கியமா ?” கெளரியின் சிரிப்பு சந்தோஷத்துடன்தான் ஒலித்தது. ஆனால் நெஞ்சில் இடறும் ஒற்றைப் பருக்கை போல் இகளரியின் கலகலப்பில் ஏதோ ஒரு பொய்மை ஒளிந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/114&oldid=1283323" இலிருந்து மீள்விக்கப்பட்டது