பக்கம்:கங்கா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q}群『。 *・『s, 10% போல் அவள் தாய்க்குப் பட்டது. இம்மாதிரி ஒருவரை யொருவர் தாயும் பெண்ணும் ஊடாராய்ந்து கொண்டி ருக்கையிலேயே மாது, மைசூர்ப்பாகின் நெய்யும் அவன் எச்சிலும் தோய்ந்த கையுடன் அத்திம்பேர் தோளைக் கட்டித் தொங்கிக் கொண்டே அவருடன் மாடிக்குப் போய். விட்டான். படிக்கட்டுக்கள் ஏறி முடிவதற்குள் சமாச்சாரங். களை எல்லாம் கொட்டியாகிவிட்டது. "அப்பாவும் அண்ணன்மார்களும் மாச்சுக்குப் போயி ருக்கா பள்ளிக்கூடத்திலே நாங்க எல்லாம் வாத்தியா ரோடே செஞ்சிக்கு எக்ஸ்கர்ஷன் போனோம். நானும் எதிர்த்தாத்து சுப்புணியும் எனிமி. எங்க பள்ளிக்கூடத் திலே ஓல்ட் பாயிஸ் டிராமா போடப்போறா. அதில் நான் நாரதர். அத்திம்பேர் ! அத்திம்பேர் ! நீங்களும் ஒரு டிக்கெட் வாங்கறேளா ? வாங்கணும் : அதெல்லாம் முடியாது ரைட் " கேள்வி, பதில் எல்லாம் அவனே போட்டுக்கொண்டு விஷயத்தை முடித்துக்கொள்வது மாதுவின் தனிப்பாணி : அவன் பாணியே அவன் கவர்ச்சி. மாதுவின் லொடலொடாவுக்குப் பதிலே பேசாமல், தன் கழுத்தைக் கட்டிய மாதுவின் ஆசைக் கனத்தைத் தாங்கிக் கொண்டு புன்னகை புரிந்தவண்ணம், அவள் கணவன் படிகளை ஒவ்வொன்றாய் ஏறுவதை கெளரி தன் தாயாருடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஒரக்கண் னால் கவனித்தாள். அவளையுமறியாமல், அவளுக்குத் தன் தம்பிமேல், அவனுடைய பின்னணியில் மற்றைய உடன்பிறந்தார்மேல், ஒரு அசூயை எழுந்தது. சில நாட் களாகவே அவள் தன் நினைவுக்கு விளங்காது, உள் பட்டுக்கொண்டிருக்கும் சொல்ல இயலாத வேதனையில் ஒரு இம்மி கூடிற்று. சற்று நேரத்திற்குப் பிறகு காப்பியை ஏந்திக்கொண்டு கெளரி மாடிக்குச் சென்றபொழுது அவள் கணவன் தனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/115&oldid=764288" இலிருந்து மீள்விக்கப்பட்டது