பக்கம்:கங்கா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

கங்கா

யாய்த்தான் அறையிலிருந்தான். அறைக்கு வெளியே வாசற்புறம் பால்கனியிலிருந்து, மாடியே அதிரும் குரலில் மாது, "கேட்கிறதா ? கேட்கிறதா ?” என்று கேட்டுக் கொண்டிருந்தான். பொறுமையுடன் நெருப்புப் பெட்டி டெலிபோனைக் காதில் வைத்துக்கொண்டு அத்திம்பேர் புன்னகை புரிந்தவண்ணம், ஊம் , கொட்டிக் கொண்டி ருந்தார்.

காப்பி டம்ளரும் கையுமாய், அவனைச் சிந்தித்தபடி வாசற்படியில் நின்றாள். அவளுக்கு அவன்மேல் ஒரே எரிச்சல் எழுந்தது. ஒருமையில் கூட எண்ணங்கள் ஓடின. ஆளுக்குத் தக்கமாதிரி பச்சோந்தியாய் இவனால் எப்படி அவ்வளவு உண்மை போன்ற வர்ணம் மாற முடியறது ? குழந்தைக்குச் சரி குழந்தையாய் நெருப்புப் பெட்டி போனை எப்படிக் காதில் வைத்துக் கொள்ள முடியறது ? ஆபீஸில் இவனுக்கே ஒரு தனி போன் இருக்கிறது எனக்குத் தெரியாதா? இந்த போனே அந்த போன்மாதிரி, பெரிய காரியத்தில் தன்னை மறந்த தினு சில் எப்படி மாதுவோட விளையாட முடியறது ? tofTġi ஒரு சமயம் செய்யும் நிர்த்துளி எல்லோருடைய பொறு மைக்கும் பெரிய சோதனை. ஆனால் இந்த மனுஷனின் பொறுமை அல்ல பொறுமைகளுக்கு எல்லையே கிடை யாதோ ? இதோ, முகம் இப்போ என்பக்கம் திரும்பு கிறது. மனுஷன் வர்ணம் மாறுவதைப் பார், பாரேன் இந்த விந்தையை கன்னத்தின் கோணத்தில் ஒரு சிறு ஒடிப்பு. உதட்டோரத்தில் ஒரு இழுப்பு. எனக்கேற்ற சிரிப்பில் முகம் வார்ப்பு மாறி அந்தச் சிரிப்புக்கேற்ற மலர்ச்சியில் முகம் திரியறது.

  • తి త్రాతత్రా அச்சமயம் ஏன் அவ்வளவு கோபம் ಶಿಕ முகத்துடன் விடுவிடெனப் போய் அவர் குனிந்து காதண்டை பிடித்துக் கொண்டிருந் நெருப்புப் பெட்டியைப் பிடுங்கி வீசி எறிந்தாள். ருந்த
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/116&oldid=1283324" இலிருந்து மீள்விக்கப்பட்டது