பக்கம்:கங்கா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

105


என்ற பாவனையில் மாது உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டினான். "அத்திம்பேர் அத்திம்பேர் தரேளா ? கடை இந்தத் தெரு திருப்பத்திலேதான் இருக்கு, திறந்துதான் இருக்கு-" - அத்திம்பேர் கீழே உருண்ட வாணத்தைக் கையி லெடுத்தார். திரியிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அதை உற்று குனிந்து நோக் "படr-iர்" ஐந்து வருடங்களுக்கு முன் நேர்ந்த அந்தச் சமயத் துடன் மறுபடியும் மோதின. அதிர்ச்சியில், அவன் கட்டி லில் துடித்து விழுந்தான். அறையில் கந்தக நாற்றம் பொசுங்கிற்று: 女 ★ ★ ஆகாயத்தில் வாணம் வெடித்தபோது கெளரி வெந்நீருள்ளில் இருந்தாள், குடை அவள் மேலும் கவிந் தது. அவளும் அதன் நிழலுள் நழுவினாள். பிடரியி னின்று அவிழ்ந்து புரளும் நீண்ட கருங் கூந்தலாள் கெளரி. இருண்ட சிந்தனைகளைத் தனக்குள் அடைத்த கெளரி, நல்லவேளையாக ஒண்டிக்குடித்தனமானாலும், தனி வெந்நீருள், கதவைத் தட்டி அவளை அவசரப் படுத்து வார் இல்லை. கெளரிக்கென்னவோ ஆசைதான், யாராவது பெரிய வளாய், குடித்தனக்கார மாமியாத்தானிருக்கட்டுமேதனக்கு ஒரு கை எண்ணெய் வைத்தால் தேவலைதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/119&oldid=1283325" இலிருந்து மீள்விக்கப்பட்டது