பக்கம்:கங்கா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறு சந்திப்பு கரையோரம், உட்கார்ந்த வண்ணம், சிந்தா நதியில் காகிதக் கப்பல்கள் விட்டுக் கொண்டிருக்கிறேன். புத்த கத்தையொட்டித்தான் இவ்வெண்ணம் தோன்றியதானா லும், இன்றும் எப்பவும், யாவரும் வேறென்ன செய்து கொண்டிருக்கிறோம்? என் எதிரே, கரையோரம், சிற்றலைகள் தவழ்கின்றன என் பார்வையுள் அடைத்த விஸ்தீரணத்தில், நதி அகலம், ஏரிபோலத் தோன்றுகிறது. பிரம்மாண்டமான அகலம், நீளம், எதிர்க்கர்ை அதோ, அதோ எங்கோ ஆனால் இனி நான் அங்கு போய்ச் சேரப்போவதில்லை. சேர வேணும் எனும் வேகமும் இல்லை. என்றேனும் ஒரு நாள் என் வேலையில், குறுக்கே நடக்கத் தோன்றி, நடுவ்ழியில் எனக்குரிய ஆழத்தில் கவிழ்ந்த என் கப்பல்களோடு, அமிழ்ந்து, அமரத்வம் அடைந்துவிடுவேன். எதிர் நீச்சலுக்கு எனக்கு இனி நேரமில்லை உள்ள பூர்வமாக மட்டுமன்று. உடல் நிலையே தெரிந்துகொண்டு விட்டது. ; கரையோரமாக நடந்தும், இடையிடையே சுழலோடு நீந்தியும், என் வேளை ஏறக்குறைய கழிந்துவிட்டது. ஆனால் என் வேளையுள் இதுவரை நான் வந்திருக்கும் துர்ரம் ? இந்தச் சிற்றலைகளுக்குத் தான் தெரியும், அவை என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன. ஏளனம்? தாயன்யிலா? சரி போ, ஏதோ உன்னால் முடிந்தவரை- என்கிற சலுகையிலா? அவை தாம் அறியும். . 烹 இத்தொகுதியை, இரண்டாம் பதிப்பில், ஏறக்குறைய முப்புத்திஎட்டு வ ரு_ இடைவேளைக்குப் பிறகு தாண்கையில், பெருமிதம் உள்பொங்கும் அதேசமய்ம், லேசான விசனமும் ஏடு ப்டர்கி இது. இதில் அடங்கியிருக்கும் கதைகள், தொகுதிக்கும் முன் ஐந்தாறு வருடங்களில் எழுதப்பட்டவை. ஆகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/12&oldid=764293" இலிருந்து மீள்விக்கப்பட்டது