பக்கம்:கங்கா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

கங்கா


ஆனால் தானாகப் போய் மாமியைக் கேட்க லஜ்ஜை. மாமியும் முன் வரவில்லை, "ஒண்டியாயிருக்கையே, சிறிசாயிருக்கையே வா வா, வெத்திலையை வாயில் அடைச்சுக்கோ, நான் கெளரி கல்யாணம் பாடறேன்" என்று. மாமியைக் குற்றம் சொல்வதிலும் முறையில்லை. அவள் குழந்தைகளுக்கு உழல்வதே அவளுக்குச் சரியா பிருந்தது. ஒன்று புரிந்தது. தனிக்குடித்தனம் சில விஷயங் களுக்குச் சரியாயிருக்கலாம். ஆனால் தனித் தீபாவளி என்னவோ நிச்சயமாய்ச் சரியாயில்லை. ஆனால் இந்தத் தனிக்குடித்தனமே அவள் தாயின் திட்டம்தான். அவள் தாயே திட்டம் போட்டு எதையும் நடத்துவதில் கெட்டிக்காரி. "நான் மாமியார், மாமனார்: நாலு கொழுந்தன்மார், நாத்திமார் நடுவிலே வாழ்க்கைப் பட்டு, பட்டது போதும்; என் பெண்ணாவது கண்ணைக் கசக்காமல் வாழறதைக் கண்ணோலே பார்க்கிறேன்-” என்று போவோர் வருவோரிடம் அவள் முறையிட்டுச் சொல்லும் தினுசிலிருந்து ஏதோ தன் தாயார் சிங்கம் புலி கரடி நடமாடிய கூட்டுக்குள்தான் காலம் கடத்திக் கொண்டிருந்தாள் என்று நினைத்துக்கொண்டிருந்தாள் ஆனால் அவளுக்கு நினைவு தெரிந்தது முதல் அம்மாதிரி சித்தி, சித்தப்பா, அத்தை, பாட்டி, பாட்டனார் எல்லோ ரையும் சேர்ந்தாப்போலேயோ அடிக்கடியோ அவள் பார்த்ததில்லை. விஷயமறிந்த ஒன்றிருவர் சொல்வதும் காதில் விழுந்தது. அவள் தாய் புக்ககத்தில் காலெடுத்து வைத்து ஒரு வருடத்திற்குள் பொட்டலமாயிருந்த குடும்பத்தைப் பத்து கோலமாக்கி ஒருத்தருக்கொருவர் விரோதமுண் டாக்கி, தானும் விரோதமாகி தன்னோடு தன் கணவனையும் கைக்குழந்தை கெளரியுடன் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிய்த்துக்கொண்டு வந்து விட்டதாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/120&oldid=1283326" இலிருந்து மீள்விக்கப்பட்டது