பக்கம்:கங்கா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

107


சொல்லிக் கொண்டார்கள். ஆனால் அதைப்பற்றி கெளரிக்கு அதிகம் தெரியவோ ஆராயவோ வழியில்லை; சந்தர்ப்பமில்லை. அவளுடைய தாயார்: தனக்கும் தன்னுடைமைக்கும் செளகரியம் என்று அமைத்துச் கொண்ட சூழ்நிலையில் வளர்ந்தாள். - அதனாலேதானோ அல்ல கெளரி என நாமம் படைத்து விட்டதனாலேயோ அவள் சில சமயங்களில் தன்னை மலையத்வஜ ராஜகுமாரியாகக்கூட நினைத்துக் கொண்டு விடுவாள். சுபர்வத்தில் அவளைச் சாது, ஒரு சிறு அசடு என்றுகூட சொல்லலாம். ஆனால் @站应 எண்ணம்-தான் ஏதோ ரொம்ப உசத்தி' என்கிற எண்ணம் மாத்திரம் அவளுள், வயதுடன் கூடவே வளர்ந்து வந்தது. ஐந்து தம்பிமார்களுக்கிடையில் ஒரு செல்வ குமாரியாக வாய்ந்த செல்லம், உற்பவித்த உதர மகிமை, வீட்டில் அவள் தாய் நடத்திய பூரன் ஆட்சி, பிறரிடம் காட்டும் மேட்டின்ம எல்லாம் சேர்ந்து அவ்வெண்ணத்திற்கு ஊட்டம் அளித்தன. அப்பாவுக்கு அம்மாவிடம் இருந்த பயம் எல்லோருக்கும் )سالافتة و வெளிச்சம். குத்திம்ாட்டி இழுக்கும் கொடுஞ் சொற்களைக் கக்குவதில் அவள் தாய் வரப்ரசாதி. ஆபீஸ் விட்டால் அப்பா வீட்டில் அதிகம் தங்குவதில்லை. அவருக்கு 'மாட்ச்" பைத்தியம். அந்த சாக்கில் அடிக்கடி (ിഖങ് யூரும் போய்விடுவார். அவருடைய பரம் விரோதிகசொல்வான். “அந்த மனுஷன் சந்தோஷமாய் இருக்கும் வேளையே மாட்ச்" மைதானத்தில்தானே !” ஆகையால் வீட்டில் அம்மாவும் அவளும் இட்சட்டமும் அடித்த கொட்டமும்தான். . கெளரிக்குக் கலியாணம் ஆவதற்கு மூன்று வருடங் களுக்கு முன்தான் அப்பா அம்மாவின் ஓயாத பிடுங்கலின் பேரில், ஒரு நிலத்தை வாங்கி ஒரு வீட்டைக் கட்டி முடித்தார். வீடு, ப்ார்க்க அழகாய்த்தானிருந்தது. சிநேகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/121&oldid=1283327" இலிருந்து மீள்விக்கப்பட்டது