பக்கம்:கங்கா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@官。学。珂町。 199 ஏற்ப அவளுக்கு மாப்பிள்ளையும் வாய்த்து விட்டான். தாய் தகப்பன், உடன்பிறந்தார் எவருமில்ல்ை. நல்ல உத்தியோகத்திலிருந்தான். பந்தலில் பார்த்தவர்கள் பெண்ணைவிட பிள்ளையே எடுப்பு என்று சொன் 夺莓”、。 ஏற்கெனவே வீட்டில் குடியிருக்கும் தம்பதிகளை விரட்டி விட்டுப் பெண்ணையும் மருமகப்பிள்ளையையும் தன் கண் காணிப்பிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற யோசனை கூட கெளரியின் பெற்றோர்களுக்கு இருந் திருந்தால் அந்த எண்ணம் பலிக்கவில்லை. மாப்பிள் ளைக்கு உத்யோகம் வெளியூரில். . கெளரி, கணவன் வீட்டுக்குப் புறப்படுகையில் அவளு டைய சிநேகிதிகளும் பக்கத்து வீட்டு மாமிகளும்-சிலர் நிஜ அசூயையுடனேயே, "உனக்கென்னடியம்மா குறைச்சல், கண்ணிறைஞ்ச கணவன் அவன் உத்யோகம் கை நிறைஞ்ச காசு, நீ பிறந்த இடத்திலும் ராணிதான், போகுமிடத்திலும் ராணிதான். மடிநிறைஞ்ச குழந்தை ஒண்ணுதான் இனி பாக்கி’-என்று சொல்லி வழி அனுப்பியபோது கெளரிக்குப் பெருமை கங்கு கரை யுடைந்தது. அச்சமயத்தில் அவள் தன்னைப்பற்றியும் தன் கணவனைப் பற்றியும் என்னென்ன நினைத்துக் கொண்டிருந்தாளோ அவளுக்கே தெரியாது. ஆனால் அந்த உருவமற்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் கட்டிய கோட்டைகளும் "ஹிமவானின் புத்ரி’ என்னும் ஒரே எண்ணத்தின் நடுத் தண்டிலிருந்து முளைத்து அதையே சுற்றிச் சுற்றிப் படர்ந்தவையாய்த்தான் உழன்றன. குடும்ப வாழ்க்கையில் இன்றியமையாத சிறு மோதல் களும் மனஸ்தாபங்களும் அவர்களிடையில் நேராமல் இல்லை. ஆனால் எப்படியும் அவைகளுக்குத் தான் காரணமில்லாமல் அம்மோதலின் அதிர்ச்சிகள் அவனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/123&oldid=764297" இலிருந்து மீள்விக்கப்பட்டது