பக்கம்:கங்கா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

综)郡。莎。卯了? 單蠶靈 என்னோடேயே போராடிண்டிருக்கேன் ? ஆனால் யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது. குப்பை இன்னும் ஏறிக் கொண்டேயிருந்தது. நாளடைவில் கெளரி தன்னிலேயே புழுங்க ஆரம்பித் தாள். மனம் இதுவரை தோன்றாத புதுப்புது சந்தே கங்கள் புழுத்த எண்ணங்களின் களமாகியது. அவருக்கு என்மேல் பிரியமில்லையா? அதனால்தான் ஒதுங்கி ஒதுங்கிப் பிடிபடாமல் போகிறாரா? புருஷர் களே இப்படித்தானா ? சமூகத்தில் கலியாணம் என்று ஏன் ஏற்பட்டிருக்கிறது ? இந்த அவஸ்தை படத்தானா? இதுதான் முடிவா? லகூஜிய புருஷன் எனக்குக் கிட்டியும் என் வாழ்வு ஏன் லகூதிய வாழ்வாயில்லை ? லகூதிய புருஷர்கள் எல்லாம் சுவரில் படமாகவும் மாடத்தில் பொம்மையாகவும் பூஜை பண்ணச் சரியே அன்றி, அதையும் பிண்டமுமாய் சேர்ந்து வாழ லாயக்கற்றவர் களா ? பிறந்த வீட்டிற்கே திரும்பிப் போய் விடுவோமா ? அந்த ப்ரம்மாஸ்திரத்திற்கு அம்மாவிடம் அப்பா பயந்து போவார். ஆனால் இந்த ஆசாமி மசியமாட் டானே ! போகிறேன் என்றால் சற்றேனும் கோபம் செய்யாது இரு கைகளையும் வாசற்புறம் நீட்டி வழி காட்டி விடுவான். அப்படி வீடு திரும்புவதைவிட தோல் வியும் அவமானமும் வேறெது ? வாழாவெட்டியாய் இருப்பதற்கு ஒரு வழியாகக் கைம்பெண்ணின் கதியே தேவலை. அவள் கணவன் மேல் புரியாத பகை அவளுக்கு வளர ஆரம்பித்தது. எந்தச் சமயமும் தன்னுள் உவகை பூத்த வண்ணம் எப்படி அவனால் இருக்க முடிகிறது ? ஆனால் சற்றேனும் களைப்புத் தட்டாது சதா களை திகழும் அம்முகம் கலங்குவதுதான் எப்போ ? அதைக் கலக்க வைப்பதுதான் எப்படி? காலம், வயது- எல்லோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/125&oldid=764299" இலிருந்து மீள்விக்கப்பட்டது