பக்கம்:கங்கா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

கங்கா


ரையும் பாதிக்கும் சக்தி அவனிடம் மாத்திரம் நீர்த்துப் போய்விட்டதா? இதுவே தான் அவள் கவலை, புழுக்கம், வேதனை. பாதியிரவில் திடுக்கென்று சில சமயங்களில் விழித் துக்கொள்வாள். பக்கத்தில் அவன் முகத்தின்மேல் நிலா வின் ஒளியில் ஜன்னல் கம்பிகளின் நிழல் கட்டானிட்டது. வங்கி வங்கியாய்ச் சுருண்ட ஒரு மயிர்த்திருகு, நெற்றி யில், காற்றில் அசைந்தது. நிர்மலமாய்த் துரங்கும் அம் முகத்தை, அப்பொழுதுதான் தலையணை மேல் மலர்ந்த நீலமலர் போன்று மாசுமறுவற்ற அம்முகத்தைப் பிராண் டினால் என்ன ? பேய் எண்ணங்கள் பயங்கர் எண்ணங்கள்......... மண்டையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு குடு குடு வென்று குழாயண்டை ஒடி முகத்தை நனைத்துக் கொள்வாள். - அவளுள் நேர்ந்து கொண்டிருப்பதையெல்லாம் அவன் அறிவானோ? ஆனால் அவன் அவளிடம் நடந்துகொள்ளும் முறையில் வேறுபாடு ஏதும் தெரிய வில்லை. இம்மனோ நிலையில்தான் அவள் இந்தத் தீபா வளிக்குப் பிறந்தகம் வந்திருந்தாள். அவளுக்கே தெரிந் தது. இது யாருடனும் பங்கிட்டுக் கொள்ளக்கூடியதாயு மில்லை. தனக்குத்தானே பொருமித் தன்னையே தின்று கொண்டிருந்தாள். ஆகையால், யானைவெடி அவள் புருஷன் முகத்தில் வெடித்ததும், வெடி வெடித்ததாகவே அவளுக்கில்லை. இத்தனை நாள் தன்னுள்ளே உருண்டு திரண்டு குமுறிக் • கொண்டிருந்த எரிமலைதான் வெடித்தாற் போலிருந்தது. ஒரு வேளை இதைத்தான் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/126&oldid=1283330" இலிருந்து மீள்விக்கப்பட்டது