பக்கம்:கங்கா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G羚西。öF。页育。 #13 வேண்டினாள் என்று அவனே அறிந்து, யுத்தத்தில் அம்பை மார்பில் தாங்கிக் கொள்ள முன் வரும் சுத்த வீரனைப் போல், தானே அவள் எண்ணத்தின் வெடிப் பைத் தாங்க அவ்வளவு அலங்காரத்துடன், சிரித்த முகத்துடன் அதை நோக்கிச் சென்றானோ ? அவள் கணவன் வெடியின் ஜோதியில் ஒருகணம் ஜ்வலிப் பதைக் கண்டாள், அவ்வளவுதான் அவளுக்கு நினைவு தப்பிவிட்டது. ஏறக்குறைய ஒரு வருஷம் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய் அவன் கிடந்தான், முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு மயக்கமருந்திலேயே அவனைக் கிடத்தி னார்கள். நினைவு தாங்க உடலுக்குச் சக்தி இருக் குமோ எனும் பயம். இடையிடையே விதவிதமான கோளாறுகள் நேர்ந்தன. ரண ஜன்னியும் கண்டுவிட்டது. அவன் தீயிலேயே குளித்திருந்தான். பிறகு அவன் நினைப்பை அவனிடம் திருப்பிக் கொடுக்க மெதுவாய்த் துணிந்தனர். "சாவே வாவா" என்று கூவி அழைத்தால் வந்து விடுமா ? கட்டிலோடு பிணைத்த கட்டிலிருந்து திமிர அவன் துடித்துப் புரளுகையில் வெறித்த பார்வையுடன் கெளரி, இதயத்தில் விழுந்துவிட்ட பள்ளத்தின் அடி பாதாள ஆழத்திலிருந்து, செயலற்று அவனருகே நின்று கொண்டிருந்தாள். காங்கையடித்த கண்கள், பார்வை யிலாது கட்டிலிலிருந்து அவளைப் பதில் வெறித்தன. வலியின் வேதனையிலேயே உடைப்பெடுத்து ஓடிய பிரமையில் ஒரு சமயம் அவன், தன்மேல் செஞ்சுடர்க் குழம்பு ஊற்றிக் கொண்டேயிருப்பதாகக் கதறுவான். இன்னொரு சமயம் செஞ்சுடரின் நடுவே மிளிரும் நீல ஜோதியில் தான் மிதந்து கொண்டிருப்பதாக அலறுவான். மற்றும் ஒரு வேளை, கந்தகத்தின் எரிப்பில் எழும் மஞ்சள் க-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/127&oldid=764301" இலிருந்து மீள்விக்கப்பட்டது