பக்கம்:கங்கா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

115


ரத்தம் பாய்ச்சியும் உடல் மஞ்சள் பூத்துவிட்டது. ஒரு மருந்துக்கொரு மருந்து கொடுத்து நிலைமை இன்னமும் மோசமாகிவிட்டது. இரவும் பகலுமாய் வைத்தியர்கள் அவனைச் சுற்றி வட்டமிட்ட வண்ணமாயிருந்தனர். அவன்மேல் கவிந்துகொண்ட கருமேகத்துடன் அவன் போராடுகையில், அவன் இத்தனை நாளாகத் தன்னுள் சேர்த்து வைத்திருந்த மனோபலம் அனைத்தும் செல வாகி வருவதைக் கண்கூடாகக் காண்கையில். இந்தப் போராட்டம் ஒரு பக்கம் அச்சத்தை விளைவித்தாலும், அதன் காம்பீர்யத்தையும் அவளால் தரிசிக்க முடிந்தது. இந்த யுத்தத்தின் யானைப் பசியில் தன் கணவனுக்கு அவள் இப்போது செய்த பணிவிடை அனைத்தும் ஈடிழந்து, பொருட்டிழந்து, பிசுபிசுத்து, சூன்யமாய்ப் போவதையும் கண்டாள்: வயதான சுமங்கலி ஒருத்தி அவளை மாங்கல்யபிச்சை எடுக்கச் சொன்னாள். அவள் சொல்லிக் கொடுத்த படியே, ஜாதி முறைப்படி கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு, முன்றானைத் தலைப்பை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, கால் மெட்டி ஒலிக்க, விடுவிடென வீட்டுப்படி இறங்கி, "என் புருஷனுக்கு உயிர்ப்பிச்சை போடுங்கோ எனக்கு மாங்கல்ய பிச்சை போடுங்கோ !” என்று கேட்டுக்கொண்டே தெருவழியே அவள் கோவிலுக் குச் செல்கையில், அவளுக்கே இதுவரை தெரியாத ஏதோ ஒன்று அவளுள் புரண்டது. சொல்லிக்கொடுத்த வார்த்தை களேயாயினும் அவை தொப்புளினின்றெழுந்த கதற லாய்த்தான் வெளிவந்தன. பிச்சையிட்ட கைகள் வெட வெடத்தன. அவளை முகமெடுத்துப் பார்க்க யாவரும் அஞ்சினர். கெளரி. ஹிமவான் புத்ரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/129&oldid=1283332" இலிருந்து மீள்விக்கப்பட்டது