பக்கம்:கங்கா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

கங்கா


"ஆமாம், எல்லாத்துக்கும்தான் புண்ணியம் பண்ணி யிருக்கணும். ரொம்ப நாள் இழுபடாமல், பிறருக்கு சிரமம் கொடாமல், உடம்புக்கும் ரொம்ப உபாதையில்லாமல், சனிக்கிழமையில்லாமல், வேளையில்லா வேளையில் யார் துரக்கத்தையும் கெடுக்காமல்-” "டே சேகர், கூடத்தில் பம்பரம் விடாதேன்னு: எத்தனை தடவை சொல்வது ? Get out !” - பாட்டி சிரிச்சுண்டே, ஊம், இதையும் சேர்த்துக்கோ. இதுமாதிரி ராஜா சொல்லச் சொல்லக் கூடத்தில் பம்பரம் ஆடி, அது எகிறி, ஆணி பொட்டிலே பொத்து-எனக் கென்ன. நான் போனப்பறம் எனக்குத் தெரியப் போறதா ?” “@守5斤慧” பம்பரம் வண்டாய்க் கூவிண்டு,கற்பூரமாத் துரங்கறது. இருந்தும், அதை அப்படியே அழுத்திக் கலைச்சு எடுத் துண்டு வாசலுக்குப் போயிடனும் இல்லாட்டா அப்பா பிடுங்கி ஒட்டு மேலே வீசி எறிஞ்சுடுவார். எடுத்துண்டு வாசலுக்குப் போறேன். சே, இந்த வீட்டில் எடுத்ததுக்கெல்லாம் தர்க்கம்: தொட்டதுக்கெல்லாம் கட்சி. பேரில் இருந்து பெரிசு வரைக்கும். பாட்டிக்கு நான் "ராஜா. நான் வயிற்றில் இருந்தபோது, அப்பாவும் அம்மாவும் ஸ்வாமிகளைத் தரிசனம் பண்ணி வந்தாளாம்; அதனால் பிறந்தவுடன் அப்பாவுக்கு நான் சந்திரசேகர்; சுருக்க மாய் சேகர்" . அம்மாவுக்கு குமார். அம்மாவுக்கு ஒரே முருக பக்தி. "பேனா மூடியைக் கழட்ட ஒத்தராலும் முடியாட்டா, நான் மனஸ்ாக்குள்ளே "முருகான்னு தலைப்பில், பிடிச் சுண்டு ஒரு திருகுதான் திருகுவேன். தனியா வந்துாடும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/136&oldid=1283338" இலிருந்து மீள்விக்கப்பட்டது