பக்கம்:கங்கா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

123

"ரஸத்துக்குப் புளி ஜாஸ்தி ஆயிட்டா, சுப்ரமணி யான்னு உப்பை அள்ளிப் போடுவேன்; எப்படியோ சரி பண்ணிக்கும்.” "குழம்புக்குத்தான் இல்லையேன்னு என் இஷ்ட தெய்வத்தை நினைச்சுண்டு கூடையிலே தேடுவேன். ஒரு உலர்ந்து போன சேப்பங்கிழங்காவது அகப்படாமல் போகாது. குமரன் செயல் !” - பாட்டி குடித்தனக்கார மாமியோடு சண்டைக்குப் போவாள். - "என்ன ஸ்கந்தா, நீயும் அவளோடு சேர்ந்து *குமார், குமார்’னு கொண்டாடறையே. அதென்ன *குமாரு-விளக்குமாறு ? வீட்டுக்கு மூத்த பிள்ளையா, குடும்பத்தில் பெரியவா பேர் விளங்க வேண்டாமா ? நான் தான் அவர் பேரை முழுக்கச் சொல்ல முடியவில்லை. நீயாவது வாய் நிறைய நாகராஜா'ன்னு அழைக்கக் கேட்டு மகிழறேனே !” "உங்காத்து விவகாரம் எல்லாம் எனக்கேதுக்கு, பாட்டி ? இது சாக்கில் வீட்டைக் காலி பண்ற அளவுக்கு ஏதாவது தர்க்கம் முத்திவிடப் போறது. என் ஆத்துக்காரர் ஒரு மாதிரி. சும்மா இருந்தால் இருப்பார், கோவம் வந்துாட்டா தலைகாலே தெரியாது. நான் எதிலும் பட்டுக்கப் போறதில்லை. குழந்தை கொழுகொழுன்னு: இருக்கான்; இனிமேல் கண்ணான்னுதான் கூப்பிடப் போறேன்-டேய் கண்ணா, ஊம், ஏன்’னு கேளேண்டா!" அப்புறம் பாட்டி ரகஸ்யமாய், "சரி சரி, ராஜா இன்னி சாயந்தரம் எங்கேயாவது ஒடிப் போயிடாதே; சுற்றிப் போடணும்.” "ஆமாம்மா, அந்த மாமி கண் நல்ல கண் இல்லை." இதில் மாத்திரம் அம்மாவும் பாட்டியும் ஒண்ணு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/137&oldid=1283339" இலிருந்து மீள்விக்கப்பட்டது