பக்கம்:கங்கா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

125

, "குமார், கெஞ்சிக் கேக்கறேண்டா !” கெஞ்சிக் கேக்கறதாவது ? பல்லைக் கடிக்கிறாள். "ஊஞ்சலை வீசி ஆட்டாதேடா ! போறவா வரவா மேலே படப் போறது !” ஏன் ஆட்டக்கூடாது ? ஊஞ்சலை ஆட்டல்லியே, பஸ்னா ஒட்றேன் ? பஸ் வேகமாப் போகாதா? அதுவும் ஆபீஸ் டைம் நானே டைவர், நானே கண்டக்டர் : "புர்ர்ர்-ர்ர்-ர்ர்.ர்-பஸ் ஸ்டாப் வந்துடுத்து ! ஏறுங்கோ ஆச்சா, ரைட் ரைட் டபிள் ரைட் ! ணக்ணாக்-டுர்ர்ர்ர்ர்.” "எனக்கு சாவு வரமாட்டேங்கறதே ரெண்டு நிமிஷம் கண்ணசர விடாமல், ஊர்ப் பசங்களையெல்லாம் கூட்டி வந்து நிர்த்துள்ளி பண்றானே ! இதுகள் எல்லாம் பிறக்கல் லேன்னு யார் அழுதா? தவங்கிடக்கறவா வயத்திலே தொலையக் கூடாதா ?” அம்மா நிஜமாவே முகத்தைப் பொத்திண்டு ஊஊ"ன்னு நீளமா அழுவாள். எனக்கு வெக்கமாயிருக்கும். துக்கமா வரும். பயமா யிருக்கும் வெறுப்பாயிருக்கும். திகைக்கும். நான் ஏன் விளையாடக்கூடாது? அது ஒரு தப்பா ? பாவமா ? “ஸோபா மேலே திமிதிமின்னு குதிக்காதேடா. இன்னும் அதுக்குப் பணம்கூடக் கொடுத்தாகல்லே. கிழிஞ்சுதுன்னா அப்பா தோலை உரிச்சுடுவா." இப்படி ஒவ்வொத்தராய். ஒண்ணொண்ணுக்கும் ஒரு ஒரு தோலாய் உரிச்சால், அப்புறம் எனக்கென்ன இருக்கும் ? நான் எங்கிருப்பேன் ? மொத்தம் எனக்கு எத்தனை தோல் ? உரிச்சால், உரிக்க உரிக்க, எத்தனைன்னுதான் உரிக்க முடியும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/139&oldid=1283341" இலிருந்து மீள்விக்கப்பட்டது