பக்கம்:கங்கா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

127


அட மஹாபாவி எந்தக் கசாப்புலேருந்து நேரே என் வயத்துலே முளைச்சேடா ? எந்த ராக்ஷஸப் பிறவிடா நீ ?” டிங்சர் ரொம்பவும் எரிஞ்சுது அழுதேன். "வாயைத் திறந்தையோ, போட்டுடுவேன் பலி! செஞ்ச காரியம் ஜரிக்க அழுகை வேறேயா? உம்-மூச்சு !" வாயை இறுகப் பொத்திண்டு, பீறி வர தேம்பலை உள்ளேயே தள்ளிண்டு, அவஸ்தையில் முழி பிதுங் கிண்டு, அம்மா பயந்துபோய் ஏண்டா கண்ணேன்னு அணைச்சுண்டு அத்தோடு சரி. மறுபடியும் என்னத்தைச் செய்யலாம். எதை உடைக்கலாம்னுதான் துருதுருக்கறது. "சேகர், கத்தாதே - ஆபீஸ் ரூமிலிருந்து அப்பா அப்படிச் சொன்னதனாலேயே "ஹொஹ்-ஹோ !”. வாய்விட்டுக் கர்ஜிக்கத் தோணறது. கர்ஜிக்கிறேன். வாங்கிக்கறேன் . வசவு, அடி, திட்டு, உதை-ஊ-ஹல்ம். "கைதான் வலிக்கிறது. அத்தனையும் துடைச்சுப் போட்டுத்தானே வளையவரான் !" "நீயே பார்த்துக்கோ, உன் பிள்ளையை ' "ஏன் நீங்களேதான் பாருங்கோளேன். உங்கள் பிள்ளையை !” - - எனக்கு என் அப்பா. என் அம்மா, ஆனால், இவா மாத்திரம் உன்னுது உன்னுதுன்னு ஒருத்தருக் கொருத்தர் ஒதுக்கித் தள்றாளே ! .” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/141&oldid=1283343" இலிருந்து மீள்விக்கப்பட்டது