பக்கம்:கங்கா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13ö கங்கர உடனே 'பக் கெனச் சிரிப்பாள். வாய் பொக்கை, சிரிச்சால் அழற மாதிரியிருக்கும். "ஆனால், தன்னைப் பண்ணிக்கத் தெரியாது. பழையதுக்குக் காலையில் தொட்டுக்கோ, சாயந்திரம் ஏப்பத்தில் நெடியடிக்கும்.” அதுபோல், என் மாலையில், என் காலை நெடி கிளம்புகிறதோ ? அப்போ கசந்தது. இப்போ இனிக் கிறது. இன்னும் கொஞ்ச நாழி, என்ன அவசரம் ? வீட்டுக்குப் பின்புறம் ஒரு மாமரம். கொல்லைத் தாழ்வாரத்தில் தூண்மேல் சாய்ஞ்சுண் டிருக்கேன். என்னென்னவோ யோசனை யோசனையா வரிது, இந்த மரம் எப்படி, இப்படியே வருஷக்கணக்கா நிக்கறது? ஒரு சமயம் இதன்மேல் கல்லைவிட்டு எறிஞ்ச துக்கு "அதுக்கும் உசிர் உண்டு, வலிக்கும். எப்படியும் உன்னைவிடச் சமத்து, வெச்ச இடத்தில் இருக்கு பார் !"னு அப்பா கடிஞ்சார். அப்போ சமத்தாயிருக்கணும்னா மரமாயிருக்கணுமா ? மரமாயிருந்தால்தான் சமத்தாயிருக்க முடியுமா ? "சமத்தாயிரு, சமத்தாயிரு” - எல்லாரும் எப்போ பார்த்தாலும், எதுக்கெடுத்தாலும் "சமத்தாயிரு-இது ஒரு ஜபம். கோவிச்சுண்டா, "அப்படியெல்லாம் இனிமேல் பண்ணப்படாது. இனிமேல் சமத்தாயிருக்கணும். தெரிஞ், சுதா ?” பயமுறுத்தல். சந்தோஷப்பட்டால், "ஆ, அப்படித்தான் எப்பவும் இதே மாதிரி சமத்தாயிருக்கணும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/144&oldid=764320" இலிருந்து மீள்விக்கப்பட்டது