பக்கம்:கங்கா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

கங்கா


"அதாண்டா, காமெரா, உன்னைப் போட்டோ எடுக்கப் போறோம் வரையா?” வாசல் பக்கம் போறோம். மதனா ஒரு நாற்காலியை இழுத்துப் போடறான். நான் உக்கார்றேன். "நான் பிடிக்கிறேன்-- "இல்லை நான்தான் பிடிப்பேன்-” "மாட்டேன்.-” "போடா- ” நான் தீர்ப்பு சொல்றேன். "ஸ்ாயியே பிடிக்கட்டும். அவன் அப்பாதான் போட்டோ ஷாப்புலே வேலையா யிருக்கார்.” - "ஆல் ரைட், மதனா! சேர் பின்னாலே நின்னுக்கோ வெரிகுட், ஸார்-லைட் அட்ஜெஸ்ட் ஆகல்லே-கொஞ்சம் இந்தப் பக்கம்...நோ-ஸ்டாண்ட் அப் ப்ளீஸ்-” எழுந்து நிக்கறேன்: “ബി." உக்கார்றேன். “ஸ்டாண்ட்” நிக்கறேன்.

  • விட்”

தடால்னு விழறேன். ரெண்டு பேரும் உள்ளடக்கித் தவிச்சுண்டிருக்கறச் சிரிப்பு தண்ணி மாதிரி மூஞ்சியில் பீச்சியடிக்கறது. எனக்குச் சப்பையில் நல்ல அடி. ஏமாந்த கோவம் வேறே. விழுந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/148&oldid=1283346" இலிருந்து மீள்விக்கப்பட்டது