பக்கம்:கங்கா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கா ேெண்டியை எதிர்பார்த்து ரயிலடியில் காத்திருந்தேன். சம்பளம் பத்திரமா என்று ஒருமுறை உள் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். வீட்டுக்குப் போகவேண்டுமென்றில்லை. இதற்குள் அவள் முகடு முகத்தில் விழிக்கவேண்டாம்; வெடுக்கு வெடுக்கென ஆளைப்பிடுங்கும் வார்த்தைக்ளுக்கு இப்பவே போய் ஈடு கொடுக்க வேண்டாம். ஆகையால் ரயிலடியில் அவ்வப்போது வரும் வண்டிகளையும், அவைகளிலிருந்து இறங்குவோரையும் ஏறுவோரையும் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தேன்.இம்மாதிரி நானும் எத்தனை முறை ஏறி இருப்பேன்! வீட்டிலிருந்து கிளம்புகையில் வெற் றிலையை மடிக்கக்கூட நேரமில்லாது வெறுமனே வாயில் சுருட்டிப் போட்டுக் கொண்டு ஆபீசில் மாடாய் உழைத்து விட்டு, மாடாய் வார்த்தைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு, இதே வண்டியில் வீடு திரும்பினால் அங்கும் நிம்மதியில்லை. குழந்தைகள் தொந்தரவும் அவள் சிடு சிடுப்பும் ஆரம்பத்தில் நாங்கள் இப்படியாயிருந்தோம் ? அவளும் இப்படியாயிருந்தாள்? எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. ரயிலடியிலேயே உட்கார்ந்து பொருமிக் கொண்டிருந்தேன். ஒரு வண்டி வந்தது ஜனங்களைக் கொட்டிவிட்டு ஜனங்களை வாரிக்கொண்டு சென்றது. மாலை வெய்யில் பொன்னாய் மாறிற்று. தென்றல் தவழ்ந்தது. நினைத்துக்கொண்டேன் : எங்களுக்குக் கலியாணம் ஆகுமுன் நான் ரயிலேறி என் தாயாருடன் இவளைப் பெண் பார்க்கச் சென்றதை. அப்போது அப்பிரயாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/15&oldid=764326" இலிருந்து மீள்விக்கப்பட்டது