பக்கம்:கங்கா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

கங்கா

136

நம் உடம்பே ஒரே துளைமயமாமே ! அப்படியானால் ஒவ்வொரு துளை வழியாய் இந்த மஹா சிரிப்பு எட்டிப் பாக்கறப்போ என்ன பண்றதுன்னே புரியல்லே. உடம்பு அப்படிப் பரபரக்கறது. "ராஜா, ஆண்டவன் உனக்கு உடம்புக்கு மீறி உசிரை வெச்சுட்டான். இல்லாட்டா இப்படி ஆம்புலே ஏறி தோம்புலே விழுவையா ? அடிப்பட்டாலும் அழாமல் இருப்பையா ? தூக்கத்தில் கூடக் கையும், காலும் உதைச் சுப்பையா ? நாய் கனவு கானற மாதிரி! உனக்கு ஏன் இப்படி அலையறதோ தெரியல்லியே, ஈசுவரா !” பாட்டி உசிர் என்கிறாள். நான் சிரிப்பு என்கிறேன். அதுவும் அஷ்டோத்ரம்தான் போலிருக்கு. அதுமாதிரி சமயம்தான் அந்தச் சமயம் சாயங்காலம். முற்றத் தாழ்வாரத்தில் கிட்டக்கிட்ட ரெண்டு தூண்; ஒரு துரண்மேல் முதுகை நட்டுண்டு இன்னொரு துரண் மேல் காலைத் தலைக்குமேல் உயரமா உதைச்சுண்டு சாஞ்சுண்டிருந்தேன். அந்த மாதிரி சாய, அந்த இடம் எனக்கு அளவு எடுத்தாப்போல் இருக்கும். அப்படி உடம்பை விரைச்சுண்டு சாஞ்சிருக்கறதில் ஒரு குஷி இருக்கு. என் காலுக்கும் தலைக்கும் நடுவில் இருக்கும் காற்றைக் கயிறாய்த் திரிச்சு இழுத்துக் கட்டினால், நான் வில்லாயிடுவேன். இல்லையா ? ராமர் வில், அர்ச்சுனன் வில், நாணைத் தட்டினால், ‘பூம்ரொய்ஞ்ஞ்...... ராமர் வளைச்ச வில் வீணாய் வளையாதாமே ! “என் பாணத்துக் கென்ன தரே ?ன்னு ராமர் கேட்பாராமே ! "வழி-" அப்பா நிக்கறார். பட்டை பட்டையா விபூதி, பஞ்சக் கச்சம், கையில் டம்ளரில் ஜலம், அப்பா சந்தி பண்ணப் போறா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/150&oldid=1283347" இலிருந்து மீள்விக்கப்பட்டது