பக்கம்:கங்கா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{33 கங்கர் மாய்ச் சொல்றேன். அப்பா, விட்டேன்னுங்கோ : சத்தியம் வெச்சுட்டேன் விட்டேன்னுங்கோளேன் : ஆனால், நீங்கள் சொன்னாலும் எனக்கெப்படி காது கேட்கும் ? அப்படியும் இன்னும் கேட்டுண்டு தானிருக்கேன். அகப்பட்ட வேலையைப் பண்ணி கூலிவாங்கி வயத்தைக் கழுவறபோது வாய்க்ககப்பட்டதைத் தின்னு கையலம்பறபோது கூலிக்குத் தூக்கற சுமை பாரத்தடியில் தலை வயிற்றுக்குள் அமுங்கும்போது அன்னன்னிக்கதை அன்னன்னிக்கு வந்ததை வந்ததும் வந்ததே தீர்த்துவிட்டு வராதன்னிக்கு வயிறு காய மரத்தடியில் வேர்மேல் தலைவெச்சு படுத்து, அண்ணாந்து பார்த்து ஆகாசத்து நக்ஷத்திரங்களில் உங்களைத் தேடிண்டு இன்னமும் இப்பவும் கேட்டுண்டுதாணிருக்கேன். ஆனால், வீட்டுக்கு வர பயமாயிருக்கப்பா ! உங்கள் குரல் இங்கேயே கேட்டாலே ஒழிய நான் வரத்துக் கில்லை. அன்னிக்கு பயமாய மாறின சிரிப்பு, இன்னும் பயமாவேதானிருக்கப்பா. எத்தனை வருஷங்களாச்சு, இன்னும் ஓடிண்டுதானே இருக்கேன் ! ஆனால் இப்போ அது பயம்னு பயமாயில்லைச் அலுப்பாய் மாறியிருக்கு. நிற்கவும் முடியாமல் இப்படியே எத்தனை நாள், எவ்வளவு தூரம் ஒடிக்கொண்டே யிருக்க முடியும் ? ஒரு வானம் சீறிக் கொண்டு உயரப் போய் வெடித்து, பச்சை, சிவப்பு, ஊதா சரங்கள் மலர்ந்து இறங்கிக் குடை கவிகிறது. எவ்வளவு அழகாயிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/152&oldid=764329" இலிருந்து மீள்விக்கப்பட்டது