பக்கம்:கங்கா.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

139


கின்றது : எப்படி இத்தனை நக்ஷத்திரங்களை, வர்ணப் பொறிகளை, படாரை, வாணத்தின் விரல்நீளத்தில் அடைத்தான் இதைப் பண்ணின பிரயாசையென்ன. வெடித்த சுருக்கென்ன ? எனக்குத் தோன்றுகிறது: வெடிக்க வேணும் என்றே எண்ணி, இப்படி வெடித்துப் போவதில் என்ன அர்த்தம் ? அதைப் பண்ணினவனுக்கென்ன அர்த்தம் ? எதில்தான் என்ன அர்த்தம் ? அர்த்தம் இல்லாமல் இருப்பதே ஒரு அர்த் தமா ? ஏது. இந்தக் கிழவி கிளம்பமாட்டாள் போலிருக் கிறதே ! தூங்கிப் போயிட்டாளா ?

ஏ, பாட்டி, நாழியாகல்லியா ? நானும் பார்க் கிறேன், ரொம்ப நாழியாக என்னோடு போட்டி போட் டுண்டு இங்கேயே இருக்கேளே வீட்டுக்குப் போக வேண்டாமா ? தேடமாட்டாங்களா ? என்ன, உதட்டைப் பிதுக்கிண்டு சிரிக்கிறேள் ? இல்லை, எல்லாரும் போனப் புறம், தண்ணியிலே கிண்ணியிலே விழுந்து தற்கொலை பண்ணிக்கணும்னு காத்துண்டிருக்கேளா ?” "எனக்கென்னத்துக்கப்பா அதெல்லாம் ? எனக்கோ கை காட்டி சாஞ்சாச்சு. இன்னும் கொஞ்ச நாள். நானா ஏன் அவசரப்படனும் ?” "இல்லே பாட்டி, தமாஷ் பண்ணினேன். இப்படிக் கொஞ்சம் முரட்டுத்தனமாப் பேசினால்தானே, நேரம் ஆவது உங்களுக்குத் தெரியும்.” “எனக்கு ஒரு கோவமுமில்லை. என்ன வேணு மானாலும் சொல்லு, உன் மனசிலே உனக்கு தோனின தைச் சொல்றே, அவ்வளவுதானே !” "உங்களுக்கு நேரமாகல்லியா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/153&oldid=1283348" இலிருந்து மீள்விக்கப்பட்டது