பக்கம்:கங்கா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

145


காணோமே என்கிற மாதிரி ! நான் சொல்ற பேச்சைக் கேட்காமல் போனால் உச்சந்தலையில் கை வெச்சுக்க வேண்டியதுதான். பஸ்மாசூரன் மாதிரி - மார்ணிங் ஸ்டார் : மார்னிங் ஸ்டார் ! ! -” பந்தயம் முடிந்து விட்டது : மார்னிங்ஸ்டார் வாயில் நுரை தள்ளிற்று. விலா வில் வியர்வை பொங்குகிறது. மேலே ஜாக்கி அதன் கழுத்தைத் தட்டிக் கொடுக்கிறான். அவனுக்கும் மூச்சு இறைத்தது. ஹரிஹரன் மார்னிங் ஸ்டாரின் கடிவா ளத்தைப் பிடித்துக் கொண்டு, தன்னைச் சூழ்ந்திருப்ப வர்களின் அசூயையை ஆனந்தமாய் அனுபவித்த வண்ணம் வெற்றி நடைபோட்டு வருகிறான். விலாவில் விழுந்த உதையின் விலுக்கில் கனவு கலைந்து ஹரிஹரன் உளறியடித்துக் கொண்டு எழுத் திருந்தான். தொந்தியில் துணி சரிய, பொறி பறக்கும் கண்க ளுடன் மணி ஐயர் எதிரில் நின்றார். "ஏண்டா, போண்டாவை வேகப்போட்டுட்டு, அடுப் பண்டை என்னடா துக்கம் ? மூதேவி எங்கேன்னு காத்துண்டு இருப்பாளே கருகல் நாத்தம் வாசலுக்கு வந்து ஆளைப் பொசுக்கறது ! என்ன, ஹோட்டல் பேரைக் கெடுக்கவா வந்தே ? உங்கப்பன் வீட்டு கெடித்தா, சாமானை வீணடிக்க ?” - ஹரிஹரன் அவசர அவசரமாய்ப் போண்டாவைத் திருப்பினான். கொஞ்ச நாளாவே இந்த மணி ஐயன் ஒரு மாதிரியாத்தான் இருக்கான். இருக்கட்டும் ப. வா ! நேற்று மாதிரியிருக்கு, சமுத்திரக்கரையில் கூடையிலே சுண்டலை வைத்துக் கொண்டு ஈ ஒட்டிக் கொண்டி ருந்ததை இவன் மறந்துாட்டாலும் எனக்கு மறந்துாடுமா? நானே காலணாவுக்கு வாங்கி வாயிலே போட்டுண்டு க-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/159&oldid=1283350" இலிருந்து மீள்விக்கப்பட்டது