பக்கம்:கங்கா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 இங்கr "து ஊசிப் போச்சு"ன்னு இவன் மூஞ்சியிலே துப்பாத தோஷம் காலடியிலே உமிஞ்சவன் தானே இருக்கட்டும் இவனுக்கெல்லாம் ஒரு வழி வெக்கணும், ஏதோ ஸ்வாமி புண்யத்தில், மார்ணிங் ஸ்டார்” “வின் அடிச்சதும் இவன் ஒட்டலுக் கெதிரேயே ஒரு ஒட்டல் போட்டு, இவனுக்கு மேலே ஒரு முழ உயரத்துக்கு மேஜையைப் போட்டுண்டு உட்காரனும். இதனால் நஷ்டமானாலும் ஆயிட்டுப் போறது. வந்த புனமெல்லாம் போண்டியானாலும் சரி, ஒரு கை பார்த்துவிடணும். ஆமாம். வாசலுக்கெதிரே லைக்கிள் ஸ்டாண்ட். மேஜை மேலே ரேடியோ. உள்ளே சாப்பிடற டேபிள் ஒவ்வொண்ணுக்கும் கண்ணாடி போட்டு ஒவ்வொரு மேஜைக்கும் கடுதாசுப் பூ வெச்சு ஒஸ்திப் பீங்கானிலே ஆமாம் ஸ்விட்சுப் போடவேண்டியது தான் எலெக்ட்ரிக் விசிறி கிர்ர்ன்னு "அடே, அவனை அங்கேயிருந்து எழுப்புங்கடா! சாமி, ஆடிண்டிருக்கான் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கிறான். வந்தவாளை விசாரிக்கச் சொல்லு. மயக்கங் கலை யட்டும்- என்று மணி அய்யர் 'கல்லா"விலிருந்து கத்தினார். “ஏண்ட ஹரிஹரா, கொஞ்ச நாழி வெளியில் காத்தாட நின்றுவிட்டு வருவதற்குள் ப்ரளயம் பண்ணிப் பிடறையே t' என்று சொல்லிக் கொண்டே, ராமையர் உள்ளே நுழைந்தார். பிறகு குறும்புத்தனமாய், "என்னடா உன் எஜமானுக்கு வயிறு எரியறதாமே, கொஞ்சம் 'ஐஸ் வாட்டர் ஊத்தக்கூடாதா ஊறுகாய் ஜாடி மாதிரி அந்த வயத்திலே ?” "எல்லாம் இரு இரு இன்னி சாயங்காலம் வரைக்கும் தான். அப்புறம் இந்த மணி ஐயன் எங்கேயோ, நான் எங்கேயோ !” "ஏன் அதற்குள்ளேயும் எந்த மாமனார் பணத்தோடே இன்னொரு கல்யாணம் நிச்சயம் பண்ண வரான் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/160&oldid=764338" இலிருந்து மீள்விக்கப்பட்டது