பக்கம்:கங்கா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@语”。、。毋丁管。 #47 "மார்னிங் ஸ்டார்.” "என்னமோ அப்பா, நீதான் மார்ணிங் ஸ்டார் மேல் அப்படி ஒற்றைக்கொம்பா நிக்கறே ! எல்லாரும் "லைட்னிங்-” "ராமையரே உமக்கும் எமக்கும் எவ்வளவோ வாரெடை இருக்கு இந்தக் குதிரை ஜாதக விஷயத்தில் நீர் எனக்கு விட்டுக் கொடுத்துதான் ஆகணும். மூளையில் லாமலா மார்ணிங் ஸ்டார் மேலேயே போட்டிருக்கேன்!” "எனக்கு எப்படியப்பா தெரியும், உனக்கு மூளை யிருக்கு இல்லையென்று ?” - "இன்னி ru/5Tಿಡ್ತಿ தெரியுங்கானும் ஒய் ! நூறு ரூபாய் ஸ்வாமி முள்ளங்கியத்தை மாதிரி நூறு ரூபாய் !” "ரூபாய் ஏது அப்பேன் இப்போ ? பஸ் டிக்கட் மாதிரி நோட் என்று சொல்லு !” ஒற்ரிஹரன் மேல் துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தான். நூறு ரூபாய் ! சிறுகச் சிறுக, எம். எஸ். கச்சேரி கேட்ட பணம் போக, "பாகவதர் படம் பார்த்த பனம் போக, மூர்மார்க்கெட்டுக்கு ஷோக்காய்க் கண்ணாடி, சீப்பு, வாசனைத் தைலம் எல்லாம் வாங்கப் போய், முடிச்சவிழ்ப்பவன் பறிச்சது போக, ஹோட்டலில் கை தவறிக் கீழே நழுவவிட்ட கண்ணாடி டம்ளர்களுக்கு (இது தினம் ஆகும் இரண்டு மூணு சராசரி) அழுத அபராதப் பணம்போக, வீட்டில் செலவுக்கு தர்மபத்தினி அலமேலுவுக்குக் கட்டின கப்பம்போக, ஆசைக் கிழத்தி சந்திராவுக்கு ஸ்மர்ப்பித்த பணம் போக- இத்தனை கண்டங்களையும் சமாளித்துக் கொண்டு, தேனி தேன் கூட்டுவதுபோல் சிறுகச் சிறுகச் சேர்த்த பணம்-நூறு ரூபாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/161&oldid=764339" இலிருந்து மீள்விக்கப்பட்டது