பக்கம்:கங்கா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

é》帮了。亭。町官。 #4% யிலே எல்லாமே அடிச்சுண்டு போயிடறது. காப்பின்னா எப்படியிருக்கும் தெரியுமா? எப்படிச் சொல்றது? "திக் காயிருக்கும் என்கட்டுமா ? மணமா யிருக்கும்னு சொல்லட்டுயா ?- அதெல்லாம் சரியில்லேப்பா பொம்ம னாட்டி மாதிரியிருக்கும், அழகாய் ! ஜோராய் சொகு-" "ஆமா-காப்பி போட்டால் மாத்திரம் ஆயிட்டுதா" கலக்கற ஷோக் வேறேயிருக்கப்பா ! அதுக்கு ஹரிஹரன் தான் சரி. பார் அவன் ஆத்தற 'ஸ்டைலையே பார் ? வந்தான் ஹரிஹரன். காப்பி டம்ளரையும் டபரா வையும் பந்தாடுவதுபோல் ஏந்திக் கொண்டு வந்து மேஜையண்டை நின்று, காப்பியை ஒரு விசிறு விசிறி ஆற்றினான். டம்ளருக்கும் டபராவுக்கு மிடையில், சுமார் மூன்றடி வீச்சுக்குக் காப்பி சாட்டை அடித்தது. ஆனால்: டபராவில் இறங்க வேண்டிய காப்பி மறுபடியும் டபரா வில் இறங்கவில்லை. நேரே, காப்பி கேட்டிருந்த ஆள் தலைமேலேயே போய் இறங்கி ஒரு இடம் பாக்கி இல்லை-அவருடைய முகம் மீசை மயிர் நுனிகள் பட்டுச் சொக்காய், அங்க வஸ்திரம் ஜரிகை விசிறி மடிப்பு வேஷ்டி-ஒன்று பாக்கியில்லை. (அப்புறம் ராமையர் : "ராமபாணம் கெட்டுது போடா!") நாற்காலிகளும் மேஜைகளும் நகர்ந்தன. கண்ணாடி டம்ளர்கள் கிண் கிணுத்தன. பித்தளை டம்ளர்கள் கலகலத்தன. "த்ஸோ த்ஸோ த்ஸோ !” "ഈ ഈ ഈ " "ஹோ ஹோ ஹோ !” "அடாடா புத்தம் புதிசுபோல இருக்கே ஸார் " "ஹரிஹரா !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/163&oldid=764341" இலிருந்து மீள்விக்கப்பட்டது