பக்கம்:கங்கா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

கங்கா


"மார்ணிங் ஸ்டார்?" என்று பரபரப்பாய்க் கேட்டான் ஹரிஹரன். "நோவேர்தான் ! கடைசியிலே முதல் !” "மார்னிங் ஸ்டாரா சாமி ?- என்று சோடாக்கடை நாயர் குறுக்கே பேச ஆரம்பித்தான். அவன் முகத்தில் விஷமம் கூத்தாடிற்று. "யான் பந்தயங் காணப் போயி ருந்தது. ஈ மார்ணிங் ஸ்டார் விஷயம் யாவரும் கேளனும் வாலைத் தூக்கி ஓடவும் சக்தியில்லா. ஆ குதிரை யாவதுக்கும் கடைசி. அதுக்கு ஆகாரம் இல்லா என்னு என் சம்சயம். யாது காரணம் கேட்டோ ?முன்னே குதிரை ஒடறதில்லா, ஆ குதிரை வாலை ஈ மார்ணிங் ஸ்டார் மென்னு அசை போடறது. அது குதிரையல்லா கழுதை-" நாயரை அடிக்க ஹரிஹரன் கையை ஓங்கிவிட்டான். நாயர் தலைகுனிந்து பின் வாங்கிக் கொண்டே, "யாது ஸாமி, இந்தா தேவrயம்? யான் உள்ளதைப் பறைஞ்சுது. ஞான் அரிச்சந்த்ர வம்சமாக்கும்-என் குடும்பம் மலை யாளம் போய்க் குடியேறியது-யான்-” தலை சுழன்றது. ★ ★ 玄 இம்ரிஹரன் வந்து கதவை இடித்தான். இல்லை, உடைத்தான். அவன் விடுதி கடைசிக் கட்டு. நல்ல நாளிலேயே முன் கட்டிலிருப்பவர்கள் கதவைத் திறக்க மாட்டார்கள். அதுவும் நடுநிசியில் கேட்பானேன்? "ஹாம்-ஹாம்" என்று முனகிக்கொண்டு, மெல்ல, மெல்ல ஆடி ஆடி அசைந்து தள்ளாடி வந்து, கதவைத் திறந்த அலமேலு கையில் விளக்கைப் பிடித்த வண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/166&oldid=1283352" இலிருந்து மீள்விக்கப்பட்டது