பக்கம்:கங்கா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

கங்கா


நாழிகை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, ஹரிஹரன் வெளியே நடந்தான். எங்கே செல்வது ? சந்திரா சந்திரா நல்ல அழகு; மஹா புத்திசாலி. பேச்சிலே தேன் ஒழுகும்; பாடினால், சாப்பாடுகூட வேண்டிய தில்லை; இன்றைக்கெல்லாம் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், சந்திரா மனுஷ ஜன்ம மில்லை. இப்போது போய்க் கதவையிடித்தால், “அஞ்சு ரூவாயானாலும் சும்மா வரப்போமோ ?..." என்று ஸ்ஹானா பாடிக் கொண்டே, சிரித்த முகத்துடனேயே கதவைச் சாத்திவிடுவாள். குனிந்த தலையுடன் ஹரிஹரன் நடக்க ஆரம்பித் தான். அவன் கால்கள் அவனையும் அறியாமல் சமுத் திரக்கரைக்கு இழுத்துச் சென்றன. போய், மனலில் குப்புற விழுந்தான். மையிருட்டில் குளிர்ந்த காற்று உடலின் மேலும், மூடிய கண் இமைகளின் மேலும், மெல்லெனத் தவழ்ந்து விளையாடியது. பிறகு, குளிர ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவன் அப்படியே படுத்திருந்தான். இரண்டு தினங்களாகவே நல்ல தூக்கமில்லை. இன்றிரவு சாப்பாடு மில்லை. குடித் திருக்கும் காப்பிக்கோ அளவேயில்லை. வயிற்றைப் பிரட்டி, வாந்தி வருவதுபோல் குமட்டிற்று: மூர்ச்சை போட்டாற்போல் விழுந்து கிடந்தான். எங்கிருந்தோ ஸென்ட்ரல் ஸ்டேஷனின் மணி அடித்தது. 1, 2, 3, 4-! நேரமாகிவிட்டது; அடுப்பை மூட்டி, இட்டிலிப் பாத் திரத்தை அதன்மேல் ஏற்ற நேரமாகிவிட்டது. இன்று அவன் டேர்ண்’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/168&oldid=1283354" இலிருந்து மீள்விக்கப்பட்டது