பக்கம்:கங்கா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

3

. இரவு படைத்த ஒற்றை விழிபோல ரயில் பாதையில் ஒரு பெரும் விளக்கு இடையிலிருக்கும் துரத்தை விழுங்கிக் கொண்டே ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. கைக்கடியாரத்தைப் பார்த்தேன். அந்த வேளைக்கு அப்படி வருவது மங்களுர் மெயில்தான். இதில் ஏறினால் கள்ளிக் கோட்டையை அடையலாம். அவ்வளவுதான், நான் எல்லாம் மறந்தேன், வீட்டுக்குப் போகவேண்டுமென்பதை மறந்தேன் மனைவி மக்களை மறந்தேன். நானே என் நினைவில் இல்லை. என் நினைவு விருப்பமாகி கண நேரத்தில் தீர்மானமாய் ஓங்கி, அடக்கமுடியாத ஆவேச மாகி நானும் அதுவானேன். அவசர அவசரமாய் புக்கிங் ஆபீசுக்கு ஒடி கள்ளிக்கோட்டைக்கு ஒரு டிக்கட் வாங்கி வண்டியும் ஏறிவிட்டேன். ரயில் ஆனந்தமாய் தண்டவாளத்தில் தாளமிட்டு என் கள்ளிக்கோட்டைக்குப் பாய்ந்து சென்றது. நான் கங்காவின் நினைவுகளை பின்பற்றியவனாய் என்னின் இதுவரை வாழ்க்கையினின்று தப்பியோடிக் கொண்டிருந் தேன். திடீரென்று தளைகளை யறுத்துக் கொண்ட விடுதலையின் வெறியில் என்ன காரியம் செய்துகொண்டி ருந்தேன், அதன் விளைவுகள், அனர்த்தங்கள் எம்மாதிரி, இப்பவும் பின்னும் யார்யாரை எப்படி எப்படித் தாக்கும் எனும் நிச்சயமான உணர்வோ, கவலையோ இல்லாமல் நான்பாட்டுக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்தேன். கங்காt ஜன்னலுக்கு வெளியே, ரயிலுடன் ஒடிக்கொண்டே என்முன் அவள் உருவம் எழுந்தது. வெள்ளைப் பாவாடை, அதன் மேல் பச்சைத் தாவணியின்கீழ் அவள் போட்டுக் கொண்டிருந்த சிவப்புரவிக்கையின் முடிச்சுக்கும் பாவாடை முடிச்சுக்கும் இடையில், அடிவயிறு உள்வாங்கி, மேடேறி, பணி வெள்ளையாய்த் தெரிந்தது. வலையல்கள் குலுங்கும் கைகளை வீசிக்கொண்டு சிரித்தவண்ணம் அவள் தட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/17&oldid=1283257" இலிருந்து மீள்விக்கப்பட்டது