பக்கம்:கங்கா.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@爪。母。伊章。 g57 "தரித்திரம் பிடித்த மனசு உனக்கு." "ஆஹா, தாராளப் பிரபுவைத்தான் பார்த்துண்டே யிருக்கேனே. நாளுக்கு நாள் கண்ணுக்கெதிரே, சிபிச் சக்ரவர்த்தியை இருக்கிறதையெல்லாம், கடனாயும்" தானமாயும் கொடுத்துவிட்டு ஏராளமாய், "ஹோ லட்சுமணா !” என்று நிக்கிறதை !” "பாரு, நீ லா பாயிண்டெல்லாம் ஷோக்காய்ப் பிடிக்கிறாய். உங்கப்பா உன்னைப் பேசாமல் வக்கீலுக்குப் படிக்கப் போட்டிருக்கலாம்." “ரொம்ப சரி போங்கோ நீங்கள் டாக்டருக்குப் படித்திருக்கிறமாதிரிதான் !” எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. "என்னைக் கோபப்படுத்த வேண்டுமென ரொம்பவும் சிரமப்படுகிறாய். ஆனால் எனக்கே இப்போது கோபம் கூட வருவதில்லை. கோபம் வருகிற இடத்தில் சிரிப்புத் தான் வருகிறது, எது நிஜம், கோபமா ? சிரிப்பா ? இல்லை எனக்கு சொரணையற்று விட்டதா?’ விரித்த துணிமேல் கால் கட்டை விரலைச் சப்பியபடி துரங்கிவிட்ட குழந்தையைப் பார்த்தபடி, அவள் யோசனையாய் நின்றாள். "என்னைக் கேட்டால் ?” நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, கெளரவத்தை மீட்க முயன்றேன். "எனக்கு இப்பொழுது ஒரு எண்ணம் தோன்றிற்று." “உங்களுக்கு ஒண்ணுதானே ! எனக்கு ஒன்பதாயிரம் தோணிண்டேயிருக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/171&oldid=764350" இலிருந்து மீள்விக்கப்பட்டது