பக்கம்:கங்கா.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

கங்கா


"பேச்சில் மடக்குகிறது அப்புறம் இருக்கட்டும்: எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னால் என்னிடம் நீ இப்படிப் பேசித் தான் இருக்க முடியுமா ?” குழந்தைமேல் தாழ்ந்த அவள் பார்வை மெதுவாய் உயர்ந்து என்னைச் சிந்தித்தது. "பத்து வருஷங்களுக்கு முன்னால் நான் இப்படி இல்லை-- "ஒஹ்ஹோ !” நகைப் பெட்டியைக் கெட்டியாய் அமுக்கிப் பிடித்துக் கொள்வதுபோல் அவள் கைகள் ஒன்றன்மேல் ஒன்று இறுகிப் பொத்திக் கொண்டன. "பத்து வருஷங்களில் நான் இப்படி ஆனேன்.” இரண்டு சொட்டுக்கள் விழியோரங்களில் புறப்பட்டு மன மிலாது கன்னங்களில் வழிந்து மோவாயிலிருந்து உதிர்ந் தன. எனக்கு மூச்சுத் திணறிற்று. அவள் சரேலென சமையலை றக்குள் போய்விட்டாள். நான் வாசலறைக்குப் போய், மேஐைமேல் கையைக் கோர்த்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். என்னையுமறியாமல் என்னிலிருந்து ஒரு பெருத்த மூச்சு தேம்பிப் பிரிந்தது, அதன் அசதியை உணர்கையில் எனக்கே ஆச்சர்யமாயிருந்தது. மிகப் பழைமையான மூச்சு. வெகு நாட்களினடியில் புதைந்திருந்து இப்போதுதான் விடுதலையடைந்த மூச்சு. நாம் பிறக்கு முன்னரே நம் உயிர், வாழ்வில் விடப்போகும் மூச்சுக்களை எண்ணி நம் உடலில் அடைத்து வைத்திருந்தால், பின் தங்கிவிட்ட இந்த மூச்சின் இடம் எங்கிருந்திருக்கும்? அது போனதும் எனக்கே கொஞ்ச நேரம் உடல் லேசாய்க் காற்றில் மிதப்பதுபோல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/172&oldid=1283356" இலிருந்து மீள்விக்கப்பட்டது