பக்கம்:கங்கா.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

159


مسييه 1 نيويه குழாய் வழி காற்று ஊதும் சப்தம், பாரு அடுப்பில் நெருப்பை எழுப்புகிறாள். திடீரென அவள் மேல் எனக்கு மனம் பரிதபிக்கிறது. பாரு உன்மேல் குற்றமில்லை; நீ எழுப்பித்தான் பார்க்கிறாய் ஆனால் குழந்தாய் நீ ஊதும் இடத்தில் சாம்பல் பூத்து மாத்திரம் போகவில்லை; நீர்த்தே போய்விட்டது. நீ என்ன செய்ய முடியும் ? யாரு ! நீ சொன்னது நிஜம். உனக்கு நான் வணங்குகிறேன் பத்து வருடங்களுக்கு முன் நீ இப்படி இல்லை. ஆனால், பத்து வருடங்களுள் எல்வளவு நேர்ந்துவிடு கின்றன ? பிள்ளைப் பேறுகள். வைத்தியன் வீட்டில்தான் வியாதி. குழந்தைகள் பெரிய வர்களின் பிடுங்கல், ஆசா பாசங்கள் எல்லாம்தான். மடு மேடாகிவிடுகிறது மேடு மடுவாகி விடுகிறது. இறக்கைகள் முளைத்து மூலைக்கு மூலை பட்சிகள் பிய்த்துக் கொள்கின்றன. கூடு கலைந்து விடுகிறது. பொட்டலம் அவிழ்ந்து விடுகிறது. ஆசையே இல்லை என்று சொன்னவர்களுக்கு ஆசை ஏற்படுகிறது. ஏற்பட்ட ஆசை நிறைவேறுகிறது; நிறை வேறின ஆசை துராசையாக மாறுகிறது. அப்புறம் கோணி, குதிர், பூமி, ஆகாசம் எதுவுமே போதவில்லை. நான் மாத்திரம் ஏணிபோல், சார்த்திய இடத்திலேயே இருக்கிறேன்.

  • (34 of 6nji". "

கடிதத்தைப் பிரிப்பதற்கு முன்னால் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தேன். ஒன்றும் நம்பிக்கையாயில்லை. கடன் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருவோனோ டாக்டர் பில்லைத் தீர்ப்பவனோ எவன் ? பிரித்தேன். பாச்சா எழுதி இருக்கிறான்: "யார் எழுதி இருக்கா ?” என்று கேட்டுக் கொண்டே பாரு வந்தாள். ‘அண்ணாவுக்கும் மன்னிக்கும் அநேக நமஸ்காரம். நெடுநாட்களாக எழுதாததற்கு மன்னிக்க வேணும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/173&oldid=1283357" இலிருந்து மீள்விக்கப்பட்டது