பக்கம்:கங்கா.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

கங்கா


வியாபார அலுவலில் வாயில் ஈ புகுந்தது கூடத் தெரிய வில்லை. நிற்க. நான் நம் வீட்டை இடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன். கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு சிக்கல்; சின்ன விஷயம் தான் என்னவோ ஏதோ என்று திகில் அடையாதே. இஞ்சினியர் போட்ட பிளானில் உன் பாகத்துக்கு விழுந் திருக்கும் அறையும், கூடமும் தடங்கலாய் நிற்கின்றன. உன் சம்மதத்தைப் பற்றி எனக்குத் துளிக்கூட சந்தேகம் கிடையாது. ஆகையால் இடிக்க ஏற்பாடு பண்ணிவிட் டேன். இடித்து மேலே கட்டடமும் எழும்பிக் கொண்டிருக் கிறது. ஆனால் செல்லாவின் பிடுங்கல்தான் தாங்க முடிய வில்லை. அண்ணாவுக்கு எழுதினேளோ எழுதினேளோ ? என்று தூங்கவிடமாட்டேன் என்கிறாள். அதனால் அண்ணா உனக்கு எழுதிவிட்டேன். கிரஹப்ரவேசம் முகூர்த்தம் குறித்ததும் தெரியப்படுத்துகிறேன். நீயும் மன்னியும் அவசியம் வரணும்; ஏமாற்றக் கூடாது "இதென்னடிம்மா பகல் கொள்ளையாயிருக்கே இந்த அக்ரமத்தைக் கேப்பாரில்லையா ?” பாதியிலேயே பாரு இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள். விழிகள் வளையங்களாயின. "இரு இன்னும் இருக்கிறது ஒரு பின் குறிப்பு:'அண்ணா நீ குறைப்பட்டுக் கொள்ளாதே, கிரயமாய் ஏதாவது வேணுமானாலும்-பிறகு உன் இஷ்டம். உன் கஷ்டம் நமக்கு ஏதுக்கு என்கிறாள். செல்லா.” கையெழுத்து என்ன செல்லாவா? செல்லா சொற்படி பாச்சாவா ? அடிக்கிறதையும் அடிச்சுட்டு உங்கள் தம்பி யும் என் ஓர்ப்படியும் நம்மைச் சிரிக்கச் சொல்றாளா ? நீங்களும் இப்போத்தான் சொன்னேள், கோபம் வருகிற இடத்தில் சிரிப்பு வரதுன்னு." - அவள் இடிக்கையில் எனக்கு மறுபடியும் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் காதிலும் மூக்கிலும் ஆவி பறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/174&oldid=1283358" இலிருந்து மீள்விக்கப்பட்டது