பக்கம்:கங்கா.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

கங்கா


பாகத்திற்கு விழுந்து என்னைக் கேட்காமலே அழித்து விட்ட அறையை நினைக்கையில் எனக்குக் கண்கள் இருண்டன. என் அறையில்லை; என்னுடையது என்று நான் எதையும் கொண்டாடியதில்லை.அது அப்பா அறை. அப்பா வாசற்படி தாண்டி பேச்சுக்கோ பொருளுக்கோ போகமாட்டார். கோவிலுக்குப் போகும் நேரமும், சாப் பாட்டு நேரமும் போக, பாக்கி நேரம் ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்ட விசுப் பலகைமேல் உட்கார்ந்து ஏதாவது படித்துக்கொண்டோ எழுதிக் கொண்டோ யிருப்பார். இரவு அங்குதான் படுப்பார். அப்பாவுக்கு எல்லா மருந்துக்கும் ஒரே மருந்துதான். அவர் இடுப்பில் நிமிண்டிக் கொண்டிருக்கும் வெள்ளி விபூதி சம்புடந்தான். போடர் ராமு, உன் ஊசிகளையும் புட்டிகளையும் துக்கிக் குப்பையில் போடு. இந்த ஒரு சிம்டாவை எடுத்து அன்னத்தில் தூவி சாப்பிட்டால், எல்லாம் பறந் தோடிப் போகும்-" அப்பா அந்த அறையில், அந்த விசுப் பலகையின் மேல் தான் உயிர்நீத்தார். மருந்து மாயம் பார்க்கவில்லை. பார்க்க நேரம்கூட இல்லை. இரவு எட்டு இருக்கும்: நான் கூடத்தில் அம்பிப் பாப்பாவோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அது விளக்கைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

  • ராமா : ராமா !!" என்று அப்பா கூப்பிட்டார். "என்னப்பா? கூடத்திலிருந்தே கூவினேன். எனக்குக் குழந்தையுடன் விளையாடும் சுவாரஸ்யம். என் மூக்கையும் வாயையும் அதன் வயிற்றில் புதைத்துக்கொண்டு தேய்த் ததும் கிளுகிளுவென சிரிப்பு மத்தாப்பு கொட்டிற்று.

"ராமா சுருக்கவா - அப்பாவின் குரல் கணி ரென்றது. "என்னப்பா?" என்று கேட்டுக்கொண்டே ஒடினேன், யார் தாய், யார் கன்று ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/176&oldid=1283359" இலிருந்து மீள்விக்கப்பட்டது