பக்கம்:கங்கா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

163


"ராமா ! என்னை மெதுவாய் படுக்கவை. எனக்குக் கால் விழுந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாழியில் போய் விடுவேன்-” "என்னப்பா ? என்னப்பா சொல்றேன் ??” என்று பதறினேன். என்னதான் நான் வைத்யனானாலும், என்ன தான் சாவு பழக்கமானாலும், நான் என் அப்பாவுக்கு மகன்தானே ! "ஒண்னுமில்லை ராமா, கவலைப்படாதே - ஊ-ஹல்ம், தலைகாணி வைக்காதே-தலையைக் கீழே போடு.” "அப்பா : அப்பா !!-” "உஷ்-இப்போ அழக்கூடாது. அப்புறம் அப்புறம், எனக்கென்னடா குறைச்சல் ? ராமா ராமா என்று என் பிள்ளை பேரைச் சொல்கையில் ராமதாசகத்தைச் சொல்லிக்கொண்டே போகிறேன். அந்த ராமாயணத்தை என் கையில் வை. ராமா, நீ நல்லவன்; உலகத்தில் எப்படிப் பிழைக்கப் போகிறாய் என்று உன்னைப் பற்றித் தான் கவலை. ஆனால் அதற்கு நான்தான் என்ன செய்யமுடியும் ? நான் என்ன சதமா ? யார்தான் சதம் ? உன் அம்மா கூப்பிடுகிறாள் போகிறேன். ராமா ராமா-" அந்த இடந்தான் என் பாகத்துக்கு விழுந்து என் தம்பி பழித்துவிட்ட என் அப்பாவின் அறை என்னுடையது என்று எதையும் நான் கொண்டாடியதில்லை. அந்த விசுப்பலகையாவது இருக்கிறதோ அல்ல செல்லா அதையும் பிளந்து வென்னிரடுப்பில் சொருகி விட்டாளோ யார் கண்டது. யார் என்னத்தைச் செய்ய முடியும் எப்பவுமேதான் யார் என்னத்தைச் செய்ய முடிகிறது ? நியாயத்தை விதிக்க நான் மனுவா அல்ல மனுசொன்ன படிதான் எல்லாம் நடக்கிறதா ? அவரவர்களுக்கு அவரவர் நியாயம். அதன்படி ஒரு பொது நிாதி. அங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/177&oldid=1283360" இலிருந்து மீள்விக்கப்பட்டது