பக்கம்:கங்கா.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

கங்கா


என் தம்பி வீட்டையழித்துக் கட்டி வாடகைக்கு விடப் போகிறான். அவனுக்கு ஏற்கெனவே மூன்று வீடுகள் இருக்கின்றன. இங்கு நான் இன்றைய பொழுது எனக்கு குடும்ப ஜீவனத்துக்கு ஒரு நோயாளியாவது வரமாட் டானா என்று காத்துக் கொண்டிருக்கிறேன்: ரேழியில் ஒரு நிழல் தட்டிற்று. என்னப்பா என் பிரார்த்தனை உன் காதுக்கு எட்டிவிட்டதா? "டாக்டர் இருக்காரா ?” "வாங்கோ வாங்கோ உட்காருங்கோ என்னய்யா, மழை நின்று வரக்கூடாதா ? ஒரே தொப்பலாய் இருக் கிறீர்களே !” வந்த ஆள் நாய்க்குட்டி போல் உடம்பை உதறிக் கொண்டான் என் முகத்தில் ஜலத் துளிகள் தெறித்தன. முகத்தைத் துடைத்துக் கொண்டேன். வந்தவனுடன் உடனே சண்டை போட முடியுமா ? ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வந்திருக்கிற பேரம். நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. “டாக்டர் ! நீங்கள் ரொம்பவும் கெட்டிக்காரர் என்று சொல்கிறார்கள்.” "எனக்கு வெட்கமாயிருக்கிறதே" என்றேன். அம் மாதிரி ஒருவரும் சொன்னதாய் நான் கேட்டதில்லை, இருந்தாலும் சொல்பவனை ஏன் தடுக்கணும் ? "டாக்டர், நீங்கள் ரொம்ப நல்லவர் என்று கேள்விப்படுகிறேன்-” என் உற்சாகம் விழுந்தது. "டாக்டர், நீங்கள் ரொம்ப நல்லவர்" "டாக்டர், நீங்கள் பொருள் படுத்த மாட்டீர் என்று எனக்குத் தெரியும்-”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/178&oldid=1283361" இலிருந்து மீள்விக்கப்பட்டது