பக்கம்:கங்கா.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

165

. “டாக்டரய்யா, உங்க கொளந்தை குட்டி நல்லா யிருக்கணும்.” "சரிதான் போ, வேலையைப் பாரய்யா !” என்று. வெளியில் அனுப்ப எனக்குத் தைரியமிருக்கிறதோ ? எதனால் நான் உருப்படவில்லை என்று எனக்கே தெரியும். - அவன் கையைப் பிடித்தேன். தூக்கி வாரிப் போட்டது. நாடி தேரைபோல் தாவிக் குதித்தது, இவனுக்கு உள் ஜன்னியல்லவா கண்டிருக்கிறது ஒருவர் துணையுமில்லாமல் எப்படி வந்தான் ? தப்பி வந்தானா ? அட ஈசுவரா வழியில் போவோர் பொறுப்பெல்லாம் என் தலையிலா ? அவசர அவசரமாய், அவன் ஈர உடையை மாற்றி என் ஆடையில் உடுத்துப் படுக்க வைத்து மோவாய்க்கட்டைவரையிழுத்துப் போர்த் தினேன். சிவப்புக் கம்பளியிலிருந்து கழுத்துவரை வெட்டினாற்போல் தலை மாத்திரம் எட்டிப் பார்த்தது. இப்போதுதான் ஆள் முகத்தை சற்று அவகாசமாய்க் கவனித்தேன். அவன் முகம் வெறியில் களை கட்டி யிருந்தது. குழந்தைகள் கதையில் ஏன், கோட்டான்கள் கதையிலும்தான்-தலையை வெட்டியெறிந்த பிறகு தலை மாத்திரம் பேசிற்று என்கிற மாதிரி சிவப்புக் கம்பளியினடியிலிருந்து அவன் தலைமாத்திரம் பேசிற்று, பெயர் விலாசம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். "சரி என்ன உடம்பு ?" “டாக்டர், நான் சொல்லப் போவதை நீங்கள் நம்பு விர்தவாா ?” "சொல்லுங்கள்-” "நான் என் கண்ணால் கண்டேன்-” "நீ உன் கண்களை நம்பாதே’ என்று நான் சொல்ல வில்லை. கண்கள் வேறு காண்பது வேறு: கண்டதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/179&oldid=1283362" இலிருந்து மீள்விக்கப்பட்டது