பக்கம்:கங்கா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

கங்கா


மாலை சுற்றிக் கொண்டிருந்தாள். பின்னால் பின்னல் தடியாய், டம்பங் கூத்தாடி சாட்டைபோல் சுழன்றது. கங்கா வெறுங் கங்காவாயில்லை. கள்ளங்கபடும் கவலையுமற்ற அவளுடைய பருவத்தின் சின்னமாய் விளங் கினாள் அவளை முதலாய்ச் சந்திக்கையில் வயது பதின் மூன்று பதினான்கு இருக்குமா ? கங்கா வீட்டில்தான் என் மாமா குடித்தனமிருந்தார். கங்காவின் அப்பா பெரிய சம்சாரி. பெரிய பணக்காரர். மர வியாபாரம், முதல் தாரத்திற்கு நான்கு குழந்தைகள். இரண்டாவதற்கு மூன்று. அவருடைய மனைவி இப்போது தன் ஐந்தாவது குழந்தையை சீராட்டிக்கொண்டிருந்தாள். இன்னமும் அவருக்கே இளம் வயதுதான். வீடு சத்திரம் தான். எப்பவும் சந்தடி, ஒரு வேளையில் ஒரு இடத்தில் ஒரு பந்தி டிபன் பண்ணும்; அதே சமயம் இன்னொரு மூலையில் இன்னொரு ஜமா'வுக்குச் சாப்பாட்டுக் கடை நடக்கும். இன்னும் சிலருக்குப் பொழுது விடிந்தும்கூட இருக்காது. வீட்டில் கூட்டம் பெருத்தமையால் தாக்கல் மோக்கல் இலாது நடக்கும் காரியங்களை எட்ட இருந்து கவனிக் கையில் வேடிக்கையாயிருக்கும். கங்கா இரண்டாந்தாரத் துக் குழந்தை. ஆனால் தாயில்லாக் குழந்தை என்று கேட் டாலே சம்பிரதாய முறையில் எழும் அனுதாபம் எவ்வளவு பொய், காரணமற்றது என்று இங்குதான் கண்டேன். எல்லாக் குழந்தைகளுக்கும் சித்திமேல் உயிர். கங்காவின் ஒன்று விட்ட சகோதரர்கள் முதலிருவருக்குக் கலியாண்ம் ஆகி குழந்தைகள்கூட இருந்தன.வீட்டுக்கு வந்த நாட்டுப் பெண்களும் மாமியாரும் சமவயது. சித்திக்கு எப்பவும் சிரித்த முகம், அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான் அவள் கணவருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் பெருகினதாகக் கேள்வி. கங்காவும் அவள் வீட்டுச் சின்னக்குழந்தைகளும் அனேகமாக நாங்கள் குடித்தனம் இருந்த பகுதியில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/18&oldid=1283258" இலிருந்து மீள்விக்கப்பட்டது