பக்கம்:கங்கா.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா: #67 வெள்ளை வெனேரென்று. அதை பார்க்க என்றுமே எனக்குப் பிடிக்கும். ஆனால் ஏனோ மூன்று நாளாய்ப் பசுவைக் கட்டிக் கறக்கக் கொண்டு வரவில்லை. அவன் மாத்திரம் பால் குவளையோடு வந்தான். இப்போது அவன் தோளில் அணை கயிறு தொங்கிற்று. ஆனாலும் கன்று வரவில்லை. இரண்டு மூங்கில் சிம்புகள் வைத்துகி கட்டிய ஒரு தோல் பையை அக்குளில் இடுக்கிக் கொண்டு வந்தான். அதன் சந்துகளிலிருந்து வைக்கோல் எட்டிப் பார்த்தது. அதை இரண்டு மூன்று தடவை மாட்டு மடியில் முட்டிக் கம்பத்தில் சாய்த்துவிட்டு மாட்டைக் கறக்க ஆரம்பித்தான். "அந்தத் தோலை அடையாளம் கண்டு கொண்ட அதிர்ச்சியில் வயிறு பகீரென்றது, பட்டனத்தில் கன்றுத் தோல்கள் சகஜமான காகஷிதான். ஆனால் அதை அப்படிப் பார்த்ததும் எனக்குத் திக்கென்றாகிவிட்டது. சில சமயங்களில் அற்ப விஷயங்கள் கூட ஜரிப்பதில்லை. மூன்று நாட்களுக்கு முன் மொழு மொழு வென்று முழு உயிரோடிருந்த கன்று. குவளையுள் பால் பீறல்கள் கிண் கிண்’ என்றன மார்பில் செம்மட்டியால் அடிப்பது போலிருந்தது. அந்தச் சப்தம் எனக்கு எப்பவுமே பிடிப்பதில்லை. அதில் எப்ப வுமே ஒரு பொய்மையிருப்பதாய் என் துணிபு. அது பால்காரனின் நாணயத்தை விளம்பரப்படுத்தும் சப்தம். அத்துடன் அது பொய் விளம்பரம் "அண்ணா நீ குறைபட்டுக் கொள்ளாதே. கிரயம் வேனுமானாலும்- பிறகு உன் இஷ்டம். உன் கஷ்டம் நமக்கு எதுக்கு என்கிறாள் செல்லா.' "திடீரென்று எதிர் வீட்டு நாய் உறுமிக் கொண்டு தோல் மேல் பாய்ந்தது. சங்கிலி கணகணத்தது. தோல் கம்பத்திலிருந்து சரிந்து நாயின் காலடியில் வீழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/181&oldid=764361" இலிருந்து மீள்விக்கப்பட்டது