பக்கம்:கங்கா.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

கங்கா


"இப்போ இல்லையேடாப்பா" என்றேன். நிஜ மாகவே அந்த சமயத்தில் குடும்பத்தில் நெருக்கடி. "என்னண்ணா கி ண் ட ல் பண்றே ? மன்னி நேற்றைக்குக் கூடப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு, கற்றை கற்றையாய் நோட்டை எண்ணிக் கொண்டிருந்தாளே !” எனக்கு வியப்பாயிருந்தது. அவளிடம் ஏது ? பாரு பாரூ!!” சிவந்த முகத்துடன் பாரு வந்தாள். "ஆமாம் ஒரு நூறுரூபாய் வைத்திருக்கிறேன். வருஷக்கணக்காய், ஈ, தேன் கூட்டற மாதிரி, எங்கம்மா அப்பா கார்த்தி, சங்கராந்திக்கெல்லாம் கொடுத்தது. நீங்கள் நவராத்திரி தீபாவளிக்குக் கொடுத்தது, நம் குழந்தைகளைப் பார்க்க வந்தவா கொடுத்ததெல்லாம் மிச்சம் பிடித்து, நமக்குத் தான் ஒரு அந்த அவசரத்துக்கு உதவும். ஏன், எனக்கே கைவளையல் எல்லாம் தேஞ்சு போச்சு, கூடக் கொஞ்சம் பொன்னை வாங்கிப் போட்டு-" "பாரு, பாச்சாவிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து விடு.” பாருவின் பார்வை என்னை எரித்தது: "பாரு, பணம் என்றைக்கும் வரும். உன்னை வழியில் போகிறவனுக்குத் தானம் பண்ணச் சொல்லவில்லை, என் தம்பிக்குத்தான் கொடுக்கச் சொல்கிறேன்-கொடு, கொடு-" 懿 . . .3$ - نسیم عم. அது என பனம. அடேயப்பா இந்தப் பாருவின் லாபாயிண்ட் இருக் கிறதே பாரு என்றுமே பேச்சில் அடங்கியதில்லை, பாவம் ! நியாயத்தைப் பேசிப் பேசியே, வீட்டில் வாயாடிப் பட்டம் வாங்கி விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/186&oldid=1283365" இலிருந்து மீள்விக்கப்பட்டது