பக்கம்:கங்கா.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

கங்கா


அப்படியிருந்து விட்டு எங்கள் வழி இப்பொழுது ஏன் தனித்தனியாய்ப் பிரிந்து போயிற்று ? இம்மாதிரி கேள்வி களுக்கெல்லாம் சரியான பதில் கிடைக்குமோ ? வாசற்படி ஏறுகையிலேயே பாருவின் அழுகுரல் கேட்டது. எனக்கு அடிவயிற்றைச் சுரீலென்றது. குழந்: தைகள் என்னவோ ஏதோ ? பதறி எதிர்க்குரல் கொடுத்து கொண்டே உள்ளே ஓடினேன். பாரு எதிரே ஓடி வந்தாள். "வளையலைக் கானோமே!" "எங்கே வைத்தாய் ?” "பெட்டிக்குள்ளே தானே பத்திரமா வெச்சிருந்தேன் . டைப்ரேட்டர் ரிப்பன் டப்பாக்குள் போட்டு வெச்சிருந் தேனே தேஞ்சு, கையிலிருக்கக்கூட லாயக்கில்லாமல் இற்றுப் போயிடுத்து. நேற்றுதான் நினைச்சுண்டிருந்தேன் உங்களிடம் சொல்லி என்னிடமிருந்த நூறு ரூபாயை உங்களிடம் கொடுத்து, இன்னும் கொஞ்சம் பொன்னை வாங்கி சேர்த்துப் போட்டு-” என் நெஞ்சுள் எலி பிராண்டிற்று. ஆனால் அதை ஒப்புக் கொள்ளாமல்: "நீ பெட்டியைத் திறந்து போட்டுவிட்டுப் போனால் யார் என்ன பண்ணுகிறது ?" என்றேன். "யார்? என்னையா சொல்கிறீர்கள்? ஏன், உங்கள் மாதிரி நினைச்சுண்டேளா ?” பாரு சுபாவம் எனக்குத் தெரியாதா? குழந்தைகளுக்கு வாங்கும் சாக்லேட், பிஸ் கோத்து, தலைக்கு வைத்துப் பின்னும் உல்லன் நூல், துணிக்குப்போடும் சோப்புக்கட்டி முதற் கொண்டு உள்ளே வைத்துக் கொண்டு விடுவாள். சமாளித்துப் பார்த்தேன். ‘சாவியை எங்கே வைத்தாயோ ?” பாருவின் கண்களில் பொறிபறந்தன. தாலிச்சரட்டை இழுத்து என் முன் நீட்டினாள். அதில் சாவிக் கொத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/188&oldid=1283367" இலிருந்து மீள்விக்கப்பட்டது